இனி இந்த ஆண்டு வரும் ஐ -போன்கள் குறித்த ருசீகர கணிப்பு! எந்த மாடல் எப்படி ?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்கள் என்றாலே உலக அளவில் பெரிய வரவேற்ப்பு இருக்கும்.இந்நிலையில் இதன் கணிப்பாளர் தற்போது இது குறித்து ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.
கே.ஜி.ஐ (K G I) செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வாளரான மிங் ச்சி க்வோ (Ming-Chi Kuo) முந்தைய ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடுகளை முன்கூட்டியே சரியாகக் கணித்தவர். அவர் 2018-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 3 ஐபோன் மாடல்களை வெளியிடும எனக் கணித்துள்ளார்.
அதன்படி, கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 10-ன் பேட்டரி, சென்சார், தொடு திரை, டிஸ்ப்ளே ஆகியவற்றை மேம்படுத்தி ஆப்பிள் நிறுவனம் 2018 மாடலை வெளியிடும் எனக் கூறியுள்ளது. ஐபோன் 10 ப்லஸ் மற்றும் 6 புள்ளி ஒரு அங்குல தொடுதிரையுடன் கூடிய ஐபோன் 10 மாடலை வெளியிடும் என க்வோவின் கணிப்பு கூறுகிறது. ஐபோன் 10 ஆனது இந்த ஆண்டில் பட்ஜெட் ஐபோனாக உருவெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி மே அல்லது ஜூன் மாதத்தில் ஐபோன் எஸ்.இ. 2 வெளியாகும் எனவும் மேக் ரூமர்ஸ் என்ற மற்றொரு நிறுவனம் கணித்துள்ளது
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….