அமெரிக்கா ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை உட்பட எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடத்திய அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை எந்தவொரு ஏவுகணை தடுப்பு அரணாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒலியைவிட 20 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. உலகின் எந்த மூலையையும் தாக்கும் திறன் கொண்டது. ரஷ்யாவின் தற்காப்புக்காகவே இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கியையும் ரஷ்யா தயாரித்துள்ளது. இந்த வகை நீர்மூழ்கிகள் பல்வேறு நாடுகளில் உள்ள நீர்மூழ்கிகளைவிட அதிவேகமாக செல்லக்கூடியது.