ஹூவாய் நிறுவனத்தின் அசத்தும் ஸ்மார்ட் போன்..! 5ஜி+ மடித்து வைக்கும் வசதியும் உள்ளதாமே!

Published by
Sulai

பல்வேறு ஸ்மார்ட் போன்கள் மலை மலையாக வந்து குவிந்தாலும் அவற்றில் மிக சில மட்டுமே மக்களுக்கு பிடித்ததாக இருக்கும். பெரும்பாலும் அதிக ஸ்டோரேஜ், அதிக செயல்திறன், சிறப்பான ஸ்க்ரீன், சிறந்த வடிவமைப்பு போன்றவை இருந்தால் தான் அதனை மக்கள் விரும்புவார்கள்.

மிக முக்கியமாக அதன் விலையும் மலிவாக இருத்தல் வேண்டும். இப்படி எல்லா வசதிகளுடன் சிலபல புதுமைகளும் சேர்ந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அட்டகாசமான மொபைலை தான் ஹூவாய் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்ய உள்ளது.


பெயர்?
ஹூவாய் நிறுவனம் பலவித மாடல்களில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்து வருகிறது. அதில் இந்த புதுவித ஸ்மார்ட் போனை எதிர்பார்த்து தான் தற்போது எல்லோரும் உள்ளனர். இதற்கு ஹூவாய் மேட் X (Mate X) என பெயரும் வைத்துள்ளனர்.

சிறப்பம்சங்கள்
இந்த மொபைல் 5ஜி நெட்வெர்க் வசதியுடன் சந்தைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் இதை மடிக்கணினி போன்றே நாம் மடித்து பயன்படுத்தி கொள்ளலாம். அப்போ இது எவ்வளவு மெல்லிய, அழகுடன் கூடிய வடிவத்தை கொண்டிருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள் மக்களே.

எப்போது?
இந்த அட்டகாசமான ஹூவாய் மேட் X ஸ்மார்ட் போனை பார்சிலோனாவில் நடக்கவுள்ள 2019 மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஸ்மார்ட் போனின் வருகையை பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

Published by
Sulai

Recent Posts

விறுவிறு வாக்குப்பதிவு : வயநாடு இடைத்தேர்தல், ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தொடக்கம்.!

டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…

2 mins ago

தொடர் கனமழை : பெரம்பலூர், அரியலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…

23 mins ago

கனமழை எதிரொலி : இந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…

60 mins ago

சீனாவில் பரபரப்பு! கூட்டத்தில் காரை ஏற்றி 35 பேரை கொலை செய்த நபர்!

சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…

11 hours ago

“காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை”…வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…

11 hours ago

நாளை வாக்குப்பதிவு எங்கெல்லாம்? : வயநாடு முதல் ஜார்கண்ட் வரை!!

டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…

11 hours ago