ஹூவாய்(HUAWEI) நிறுவனத்தின் முக்கியமான ஸ்மார்ட்போன் வரிசையாக கருதப்படும் பி20 தொடரின்கீழ் மேலுமொரு ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.இது மற்ற நிறுவனங்களுக்கு சவாலாக விளங்குகிறது. தொடர்ச்சியான முறையில் கிடைக்கப்பெற்ற ஹூவாய் பி20, பி20 ப்ரோ மற்றும் பி20 லைட் லீக்ஸ் தகவல்களை தொடர்ந்து, தற்போது அதிகாரப்பூரவமான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதாவது ஹூவாய் நிறுவனம், போலந்தில் தனது நுகர்வோர் இணையத்தளத்தில் பி20 லைட் ஸ்மார்ட்போனை பட்டியலிட்டுள்ளது. வருகிற மார்ச் 27-ஆம் தேதி பாரிஸ் நகரில் நடக்குமொரு நிகழ்வில் தான் இந்த மூன்று (பி20, பி20 ப்ரோ மற்றும் பி20 லைட்) கருவிகளும் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 5.84 அங்குல முழு எச்டி+ (1080×2280 பிக்சல்கள்) புல் வியூ 19: 9 டிஸ்ப்ளே, ஒரு ஹைசிலிகான் க்ரீன் 659 எஸ்ஓசி, 4ஜிபி ரேம், மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மேலும் இக்கருவி ஒரு செங்குத்து இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதாவது அதன் பின்புலத்தில், 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார் இடம்பெற்றுள்ளது. ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும் பி20 லைட் ஆனது என்எப்சி ஆதரவு, பேஸ் ஐடி, ஆண்ட்ராய்டு ஓரியோவின் மேல் இயங்கும் இஎம்யூஐ 8.0 ஆகிய ஆதரவுகளை கொண்டுள்ளது.
சுமார் ரூ.30,300/- என்கிற இந்திய விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவி கருப்பு, நீலம், மற்றும் பிங்க் நிற வகைகளில் கிடைக்கலாம்.
HUAWEI (HUAWEI) STORY NOTIFICATION! Other companies challenge?
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…