தொழில்நுட்பம்

வெறும் ரூ.14,000 பட்ஜெட்..8ஜிபி ரேம்..50எம்பி கேமரா.! அறிமுகமானது ஹூவாய் என்ஜாய் 70.!

Published by
செந்தில்குமார்

பட்ஜெட் விலையில் 8 ஜிபி ரேம், 6000 mah பேட்டரி மற்றும் 50 எம்பி கேமரா கொண்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதமாக, ஹூவாய் நிறுவனம் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஹூவாய் அறிமுகம் செய்துள்ள என்ஜாய் 70 (Huawei Enjoy 70) என்கிற ஸ்மார்ட்போன் ரூ.17,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் ஆகியுள்ளது.

இதன் வடிவமைப்பை பொறுத்தவரையில் இதற்கு முன்னதாக வெளியான ஹூவாய் என்ஜாய் பி60 மாடல் போலவே உள்ளது. என்ஜாய் பி60 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மக்களிடையே பிரபலமானதை தொடர்ந்து, அதே வடிவமைப்பை ஹூவாய் நிறுவனம் இந்த என்ஜாய் 70 போனிலும் பயன்படுத்தி உள்ளது.

டிஸ்பிளே

இதில் 720 x 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.75 இன்ச் அளவுள்ள சென்டர் பன்ச் ஹோல் கட்அவுட்டுடன் கூடிய எச்டி+ எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது 16.7 மில்லியன் வண்ணங்களை ஒருகிணைத்துக் காட்டக்கூடியது. பாதுகாப்பிற்காக சைடு மௌண்ட்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் வசதி உள்ளது.

123 ஸ்போர்ட்ஸ் மோட்..புளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகமான வாட்ச்.! ஃபயர்போல்ட் நிறுவனம் அதிரடி.!

பிராஸசர்

ஹூவாய் என்ஜாய் 70 ஸ்மார்ட்போன் கிரின் 710A (Kirin 710A) என்கிற சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பிராஸசர் கிட்டத்தட்ட எல்லா வகையிலும் ஸ்னாப்டிராகன் சிப்பை விட வேகமானது என்று ஹூவாய் கூறுகிறது. இது ஒரு 4ஜி சிப் என்பதால் 5ஜி இணைப்பிற்கான வசதி இருக்காது.

ஆனாலும், ரியல் வேர்ல்ட் கேமிங்கிற்கு ஏற்றதாக இருக்கும். ஒவ்வொரு ஆண்ட்ராய்டு கேமையும் 1080 பிக்சல் தெளிவுடன் விளையாட முடியும். மேலும் இதில் ஹார்மனி ஓஎஸ் 4 உள்ளது. இதே சிப்செட் ஹூவாய் நோவா 8 எஸ்இ 4ஜி, ஹூவாய் என்ஜாய் 50 ஸ்மார்ட்போனிலும் உள்ளது.

கேமரா

கேமராவைப் பொறுத்தவரையில் என்ஜாய் பி60 மாடலின் பின்புறம் உள்ள அதே செவ்வக வடிவமைப்புடன் கூடிய 50 எம்பி டூயல் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி கேமரா அடங்கும். இந்த கேமராவினால் 1080 (1920 × 1080) பிக்சல் தெளிவுடன் கூடிய விடியோவைப் பதிவு செய்ய முடியும்.

முன்புறத்தில் செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் நைட் சீன் மோட், ஹை பிக்சல், பனோரமிக் போட்டோகிராஃபி, மேக்ரோ போன்ற காமா அம்சங்களும் உள்ளன. அதோடு காம்பஸ், ப்ராக்ஸிமிட்டி லைட் சென்சார், கிராவிட்டி சென்சார் போன்ற சென்சார்களும் உள்ளன.

108எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.! உலகளவில் அறிமுகமானது ஹானர் எக்ஸ்7பி.!

பேட்டரி

207 கிராம் எடையுள்ள என்ஜாய் 70 போனில் 6,000mAh திறன் கொண்ட பெரிய லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் 22.5 வாட்ஸ் சார்ஜர் மற்றும் 10 வாட்ஸுக்கான சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் இணைப்புக்காக வைஃபை, புளூடூத் 5.1, என்எப்சி உள்ளது. யுஎஸ்பி 2.0 வசதி உள்ளதால் 480 எம்பிஎஸ் வேகத்தில் டேட்டா ட்ரான்ஸ்பெர் செய்ய முடியும்.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

எமரால்டு கிரீன், ஸ்னோவ் வைட், அப்சிடியன் பிளாக் ஆகிய வண்ணங்களில் வெளியாகியுள்ள என்ஜாய் 70 போனில் 8 ஜிபி ரேமுடன் இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. அதன்படி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் உள்ளன. இதில் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 1199 யுவான் (ரூ.14,000) என்கிற விலையிலும், 256 ஜிபி ஸ்டோரேஜ் 1399 யுவான் (ரூ.16,450) என்கிற விலையிலும் விற்பனைக்கு உள்ளது.

Recent Posts

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

5 minutes ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

2 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

3 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

3 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

14 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

15 hours ago