14 இன்ச் டிஸ்பிளே, 1 டிபி எஸ்எஸ்டி.! அறிமுகமானது ஹெச்பி பெவிலியன் பிளஸ் 14 & 16.!

HP Pavilion Plus 14

HP Pavilion Plus: அமெரிக்கத் தொழிநுட்ப நிறுவனமான ஹெச்பி (HP), கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் லேப்டாப்களை தயாரித்து சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, தற்போது ஹெச்பி பெவிலியன் பிளஸ் 14 மற்றும் பெவிலியன் பிளஸ் 16 மாடல் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பில் வீடியோ அழைபிகாவுக்காக சில மேம்படுத்தப்பட்ட ஏஐ அம்சம் உள்ளது என்று ஹெச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெச்பி பெவிலியன் பிளஸ் 14

டிஸ்பிளே

இதில் 2.8K (2880 x 1800 பிக்சல்கள்) ஹைரெசல்யூஷன் கொண்ட 14 இன்ச் (35.6 செ.மீ) டைகோனால் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 48 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் முதல் 500 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸைக் கொண்டுள்ளது. இது லோ ப்ளூ லைட் கொண்ட டிஸ்பிளே என்பதால் அதிக நேரம் பயன்படுத்தினாலும் கண்களுக்கு பாதிப்பு இருக்காது.

பிராசஸர்

பெவிலியன் பிளஸ் 14 ஆனது 13th ஜென் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் மற்றும் ஏஎம்டி ரைசன் 7 7840யு பிராசஸரில் இயங்கக்கூடிய இரண்டு மாடல்களில் அறிமுகமாகியுள்ளது. இதில் விண்டோஸ் 11 ஓஎஸ் உள்ளது. ஏஎம்டி பிராசஸரில் இயங்கக்கூடிய மாடலில் ஏஎம்டி ரேடியான்™ 780எம் கிராபிக்ஸ் உள்ளது. ஐ7 பிராசஸரில் இயங்கக்கூடிய மாடலில் இன்டெல் ஐரிஸ் எக்ஸ்ᶱ கிராபிக்ஸ் உள்ளது.

வெப்கேம் மற்றும் பேட்டரி

ஆடியோ பூஸ்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் உள்ள இந்த லேப்டாப்பில் ஹெச்பி வைட் விஷன் 5எம்பி ஐஆர் கேமரா மற்றும் டிஜிட்டல் மைக்ரோஃபோன் உள்ளது. ப்ளர் பேக்கிரவுண்ட், கரெக்ட் லைட்அண்ட் ஸ்கின் டோன் மற்றும் ஆட்டோ ஃபிரேம் போன்ற ஏஐ அம்சங்கள் உள்ளன.

1.44 கிலோ எடை கொண்ட இந்த லேப்டாப்பில் 4 செல்கள் கொண்ட 64 வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 65 வாட்ஸ் யுஎஸ்பி டைப்-சி பவர் அடாப்டர் கொடுக்கப்பட்டுள்ளது. புளூடூத் 5.3, எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவை உள்ளன.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

மூன்லைட் ப்ளூ அலுமினிய நிறத்துடன் அறிமுகமாகியுள்ள பெவிலியன் பிளஸ் 14, 16 ரேம் மற்றும் 1 டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜூடன் வருகிறது. ஹெச்பி நிறுவனம் அதன் இணையத்தளத்தில் பெவிலியன் பிளஸ் 14 ஏஎம்டி ரைசன் வேரியண்டை ரூ.91,999 என்ற விலையிலும் மற்றும் இன்டெல் கோர் ஐ7 வேரியண்டை ரூ.114,999 என்ற விலையிலும் விற்பனை செய்து வருகிறது.

 

ஹெச்பி பெவிலியன் பிளஸ் 16

டிஸ்பிளே

பெவிலியன் பிளஸ் 16 லேப்டாப்பில் 2560 x 1600 பிக்சல்கள் ஹைரெசல்யூஷன் கொண்ட 16 இன்ச் (40.6 செமீ) டைகோனால் டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவும் 48 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பிரைட்னஸைக் கொண்டுள்ளது. இது லோ ப்ளூ லைட் கொண்ட டிஸ்பிளே என்பதால் அதிக நேரம் பயன்படுத்தினாலும் கண்களுக்கு பாதிப்பு இருக்காது.

பிராசஸர் மற்றும் வெப்கேம்

இந்த லேப்டாப்பில் 13th ஜென் இன்டெல் கோர் ஐ7-13700எச் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050 கிராபிக்ஸ் மற்றும் விண்டோஸ் 11 ஹோம் மற்றும் ப்ரோ என இரண்டு வகைகளிலும் வருகிறது.

ஆடியோ பூஸ்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் உள்ள இந்த லேப்டாப்பில் ஹெச்பி வைட் விஷன் 5எம்பி ஐஆர் கேமரா மற்றும் டிஜிட்டல் மைக்ரோஃபோன் உள்ளது. ப்ளர் பேக்கிரவுண்ட், கரெக்ட் லைட்அண்ட் ஸ்கின் டோன் மற்றும் ஆட்டோ ஃபிரேம் போன்ற ஏஐ அம்சங்கள் உள்ளன.

பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்

1.89 கிலோ எடை கொண்ட இந்த லேப்டாப்பில் 4 செல்கள் கொண்ட 68 வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 135 வாட்ஸ் ஏசி பவர் அடாப்டர் கொடுக்கப்பட்டுள்ளது. நேச்சுரல் சில்வர் அலுமினியம் நிறத்துடன் அறிமுகமாகியுள்ள பெவிலியன் பிளஸ் 14, 16 ரேம் மற்றும் 1 டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜூடன் வருகிறது. விண்டோஸ் 11 ஹோம் கொண்ட அடிப்படை மாடல் விலை ரூ.1,24,999 என்ற விலையிலும், விண்டோஸ் 11 ப்ரோ கொண்ட மாடல் ரூ.1,36,999 என்ற விலையிலும் விற்பனைக்கு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்