கேமிங் உலகத்தில் புதுமை படைத்த ஹெச்பி நிறுவனம்..!

Default Image

கேம் விளையாடுபவர்களின் தேவைக்கு ஏற்ப குறைந்த பட்ஜெட்டில் நோட்புக், இரண்டு கணிணிகள் மற்றும் மானிட்டரை வெளியிட்டுள்ளது ஹெச்பி.

கணினி விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வமுடைய ஆனால் அதிக அளவு முதலீடு செய்யாத வகையில் கேம் விளையாடுவதற்காகவே இவற்றை வடிவமைத்துள்ளது ஹெச்பி. இவற்றின் துவக்க விலை 1000 டாலருக்கும் குறைவே. ஏங்குலர் டிசைன், பேக்லிட் கீபோர்டு உடன் வரும் ஹெச்.பி பெவிலியன் கேமிங் லேப்டாப்ல்(gaming laptops hp) 15.6 இன்ச் அளவும், இன்டெல் 8 கோர் i5/i7 இயக்கியும் உள்ளது.

இந்த பெவிலியன் லேப்டாப்ல் 8GB ரேம் , 1TB வெளி சேமிப்பு திறன் மற்றும் உள் சேமிப்புதிறனும் உள்ளது. கிராபிக்ஸ் பொறுத்தவரை பயனர்கள் இந்த கேமிங் லேப்டாப்பை வாங்கும் போது AMD Radeon RX 560X, NVIDIA GeForce GTX 1050 Ti அல்லது அதிக திறன்வாய்ந்த NVIDIA GTX 1060 Max-Qல் ஒன்றை தேர்வு செய்யலாம்.

15.6இன்ச் திரை உள்ள இந்த பெவிலியன் கேமிங் லேப்டாப் 4k ரெசல்யூசன் உடன் 60Hz ரீபிரஷ் ரேட் உள்ளது. மேலும் பயனர்கள் 1080p உடன் 144Hz ரீபிரஷ் ரேட் உள்ள திரையையும் தேர்வு செய்யலாம். கீபோர்டில் உள்ள வெள்ளை , பச்சை மற்றும் ஊதா நிற பின்புற ஒளிகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். ஹெச்பி இந்த பெவிலியன் கேமிங் லேப்டாப்பை 800 டாலருக்கு (ரூ52,100) வழங்குகிறது.

ஹெச்பி இரண்டு புதிய கேமிங் கணிணிகளை பெவிலியன்690 மற்றும் பெவிலியன்790 என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் விலை குறைவான பெவிலியன்690, AMD Ryzen 2 2200G சி.பி.யூ , 8GB ரேம் மற்றும் 1TB வெளிப்புற சேமிப்புதிறனும் உள்ளது. இதன் விலை சுமார் 549 டாலர்கள் (ரூ35,800). பயனர்கள் இந்த 690வகை கணிணியை 8ம் தலைமுறை இன்டெல் கோர் i7, 12 GB ரேம் மற்றும் NVIDIA GTX 1060 கிராப்பிக்ஸ் உடனும் பயன்படுத்தலாம்.

கேமிங்790 வகை கணிணி மிகப்பெரிய சி.பி.யூ உடன் துவக்க விலையாக 749டாலர்(ரூ48,850) முதல் அதிகபட்சமாக 1,699டாலர்(ரூ1,10,000) வரை உள்ளது. குறைந்த விலை கணிணியில் இன்டெல் கோர் i5 , 32GB ரேம் , திறன்வாய்ந்த இயக்கி மற்றும் NVIDIA 1050 கிராபிக்ஸ் வசதிகள் கிடைக்கும்.

ஹெச்பி HDR மற்றும் 2560×1440 பிக்சல் உள்ள 32இன்ச் கேமிங் மானிட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் திரை 95% நிறங்களுடைய DCI-P3 உடன் 75Hz ரீபிரஷ் ரேட் கொண்டு மற்றும் AMD free sync ன் மீது கட்டமைக்கபட்டுள்ளது. 

பர்ஸை பதம் பார்க்காத கேமிங் கணினிகளை வெளியிட்ட ஹெச்பி.!

கேமிங் 32 HRD திரையின் துவக்க விலை 559டாலர்(ரூ29,200)என நிர்ணயித்துள்ளது ஹெச்.பி. பிற பெவிலியன் கேமிங் கருவிகளை மே அல்லது ஜூன் மாதம் வெளியிடவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்