உலகை புரட்டிப்போடும் படைப்பு..!ஹெச்பி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!!

Default Image

ஹெச்பி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட க்ரோம்புக் X2வை , உலகின் முதல் ‘தனியே கழற்றும் வகையிலான’ க்ரோம்புக் என தெரிவித்துள்ளது.

இதன் திரையை மட்டும் தனியே கழற்றி டேப்லெட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த க்ரோம்புக் X2 -ன் தொடக்க விலை 599.99 டாலர் ( சுமார் ரூ39,000). இது HP.com இணையதளம் மற்றும் அமெரிக்காவில் உள்ள Bestbuy கடைகளில் ஜூன் 10 முதல் விற்பனைக்கு வரும்.

ஹெச்.பி க்ரோம்புக் X2ன் சிறப்பம்சங்கள் க்ரோம் இயங்குதளத்தில் செயல்படும் க்ரோம்புக் X2ல் , ஆண்ராய்டு செயலிகளையும் பயன்படுத்தலாம். இதில் 12.3 இன்ச் குவாட் ஹெச்.டி டிஸ்ப்ளேவுடன் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பும் உள்ளது. இந்த க்ரோம்புக் 7ம் தலைமுறை இன்டெல் ப்ராசஸ்சர் மற்றும் 8GB LPDDR3 ரேம் வசதியுடன் செயல்படுகிறது.

க்ரோம்புக் X2 ல் 32GB உள்ளடக்கிய சேமிப்புதிறனும், மைக்ரோ SD கார்டு மூலம் 256GB சேமிப்புதிறன் வரையிலும் பயன்படுத்தலாம். அதனுடன், இரண்டு வருடம் இலவசமாக 100GB கூகுள் கிளவுட் சேமிப்புதிறனையும் ஹெச்.பி வழங்குகிறது. ஆடியோவை பொறுத்தவரையில், B&O ப்ளேஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன.

க்ரோம்புக் X2 ல் 13 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 5மெகாபிக்சல் முன்புற கேமராவும் உள்ளது. போர்ட்களை பொறுத்தவரை, இரண்டு டைப் சி போர்ட்கள், மைக்ரோ SD கார்டு போர்ட் மற்றும ஆடியோ ஜாக்குகள் உள்ளன. குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டுமே வரும் ஆக்டிவ் பென் வசதியும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்