கடத்தல்காரர்களிடம் இருந்து உங்களை காக்கும் புதுவித ஆப்ஸ் வந்துள்ளது! எப்படினு தெரிஞ்சிக்கோங்க…
இன்றைய கால கட்டத்தில் தனியாக ஒருவர் வெளியில் செல்ல முடிவதில்லை. காரணம் “பயம்” தான். பட்ட பகலிலே நம்மை உயிரோடு புதைக்கும் அளவிற்கு இன்றைய சமூகம் மாறியுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை இப்படி பலவற்றையும் மக்கள் நிறைந்த இடங்களிலே கொஞ்சமும் பயமும் பதட்டமும் இல்லாமல் சில மனித மிருகங்கள் செய்து வருகின்றன.
இப்படிப்பட்ட அபாயங்களில் இருந்து தனி நபர் பாதுகாப்போடு வாழ சில செயலிகள் உள்ளன. இவற்றில் மிக எளிமையான மற்றும் புதுமையான இந்த செயலி உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும். இந்த செயலியை பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.
செயலி புதிது
தனி மனிதனுக்கு இன்றைய சூழலில் கொஞ்சம் கூட பாதுகாப்பு என்பதே கிடையாது. இந்த ஆபத்தான நிலையில் உங்களுக்கு உதவவே “shake2safety” என்கிற செயலி உள்ளது. பெயரே சற்று வித்தியாசமாக இருக்கிறதுதானே. உண்மை தாங்க, பெயருக்கு ஏற்றார் போல இதை நாம் எளிதாக பயன்படுத்த முடியும்.
நண்பர்களுக்கு தகவல்
நீங்கள் ஏதேனும் ஆபத்தான நிலையில் உள்ளீர்கள் என்றால் அதிலிருந்து உங்களை காப்பாற்ற இந்த செயலியை ஷேக் செய்தால் போதும். அல்லது பவர் பட்டனையும் அழுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஆபத்தில் மாட்டியுள்ளீர்கள் என்பதை இந்த செயலி தெரிவித்து விடும். அத்துடன் நீங்கள் இருக்கும் இடத்தையும் இது தெரிய படுத்திவிடும்.
குறிப்புகள்
இந்த செயலியை பதிவிறக்கம் செய்ததும் உங்களை பற்றிய சில அடிப்படை தகவல்கள் மற்றும் உங்கள் பெற்றோர் அல்லது நண்பர்களின் பெயர்கள், எண்கள் போன்றவற்றை இதில் பதிவு செய்து கொள்ளுங்கள். ஏனெனில், இதில் பதிவு செய்யும் எண்ணிற்கு தான் நீங்கள் ஆபத்தில் உள்ளதை இந்த செயலியின் மூலம் நாம் தெரிவிக்க முடியும். தனியாக பயணிக்கும் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் போன்றோருக்கு இது பாதுகாப்பான ஒன்றாக அமையும்.