நமது உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புதிய முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI), சாட் ஜிபிடி (ChatGPT) எனப்படும் சாட்போட்டை உருவாக்கி ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
இப்போது ஓபன் ஏஐ போல ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் ஏஐ சாட்போட்களை உருவாக்கி வருகின்றன. இந்த ஏஐ-க்கள் நம்மால் முடியாத பல வேலைகளையும் செய்வதோடு நாம் நினைப்பதையும் செய்கிறது. இதில் ஒன்றுதான் உங்களுக்குப் பிடித்த பிரபலமான நபர்களின் டிஜிட்டல் மாடலுடன் பேச உதவக்கூடிய கேரெக்டர் ஏஐ (Character.ai) ஆகும்.
இந்த மல்டி பெர்சனாலிட்டி ஏஐ சாட்போட், கூகுள் நிறுவனத்தின் LaMDA (Language Model for Dialogue Applications) பிரிவில் ஆராய்ச்சியாளர்களாக இருந்த நோம் ஷசீர் மற்றும் டேனியல் டி ஃப்ரீடாஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்த ஏஐ-ஐ இணையதளத்தில் மட்டுமல்லாமல் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டிலும் பயன்படுத்தலாம்.
கேரெக்டர் ஏஐ மூலம் கற்பனையான பிரபல நபர்களின் டிஜிட்டல் மாடல்களுடன் பேச முடியும். நீங்கள் கேட்பதற்கு உண்மையான மனிதன் எப்படி பத்தி சொல்வாரோ அதே போல பதில் அளிக்கும். இது கூகுள் பார்ட் மற்றும் சாட் ஜிபிடி போல அல்லாமல் உங்களை மகிழ்வித்து பொழுதைக் கழிக்கும் நோக்கில் வேடிக்கையாகவும், யோசனைகளை வழங்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…