AI மூலம் உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம்.! எப்படினு பாப்போமா.?

CharacterAl

நமது உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புதிய முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI), சாட் ஜிபிடி (ChatGPT) எனப்படும் சாட்போட்டை உருவாக்கி ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.

இப்போது ஓபன் ஏஐ போல ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் ஏஐ சாட்போட்களை உருவாக்கி வருகின்றன. இந்த ஏஐ-க்கள் நம்மால் முடியாத பல வேலைகளையும் செய்வதோடு நாம் நினைப்பதையும் செய்கிறது. இதில் ஒன்றுதான் உங்களுக்குப் பிடித்த பிரபலமான நபர்களின் டிஜிட்டல் மாடலுடன் பேச உதவக்கூடிய கேரெக்டர் ஏஐ (Character.ai) ஆகும்.

மனிதனை விட சிறப்பாக சிந்திக்கும் AI.! கூகுள் வெளியிட்ட அட்டகாச அப்டேட்.!

இந்த மல்டி பெர்சனாலிட்டி ஏஐ சாட்போட், கூகுள் நிறுவனத்தின் LaMDA (Language Model for Dialogue Applications) பிரிவில் ஆராய்ச்சியாளர்களாக இருந்த நோம் ஷசீர் மற்றும் டேனியல் டி ஃப்ரீடாஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்த ஏஐ-ஐ இணையதளத்தில் மட்டுமல்லாமல் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டிலும் பயன்படுத்தலாம்.

கேரெக்டர் ஏஐ மூலம் கற்பனையான பிரபல நபர்களின் டிஜிட்டல் மாடல்களுடன் பேச முடியும். நீங்கள் கேட்பதற்கு உண்மையான மனிதன் எப்படி பத்தி சொல்வாரோ அதே போல பதில் அளிக்கும். இது கூகுள் பார்ட் மற்றும் சாட் ஜிபிடி போல அல்லாமல் உங்களை மகிழ்வித்து பொழுதைக் கழிக்கும் நோக்கில் வேடிக்கையாகவும், யோசனைகளை வழங்குவதற்கும்  பயனுள்ளதாக இருக்கும்.

Character.Al ஐ எவ்வாறு பயன்படுத்துவது.?

  • முதலில், நீங்கள் Character.AI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்
  • அல்லது உங்கள் மொபைலில் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் கேரெக்டர் ஏஐ ஆப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
  • அடுத்து, இந்த ஏஐக்குள் லாகின் செய்ய ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். இல்லையெனில் உங்களிடம் ஏற்கனவே கணக்கு இருந்தால் அதை வைத்து லாகின் செய்ய வேண்டும்.
  • லாகின் செய்தவுடன் முகப்புப் பக்கத்தில் பலவிதமான ஏஐ சாட்போட்கள் இருக்கும். அவற்றில் உங்களுக்கு பிடித்ததைத் தேர்வு செய்து பேசலாம்.
  • இல்லையெனில் உங்களுக்கென ஒரு மாடலை உருவாக்கி அதனுடன் பேசலாம். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கிரீயேட் என்பதை பயன்படுத்தலாம்.
  • அல்லது மேலே கேம்கள், இமேஜ் ஜெனரேட்டர்கள், அனிம், கேம் கேரக்டர்கள், வரலாறு என சாட்போட்களின் வகைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதிலும் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து பேசலாம்.
  • அல்லது சர்ச் ஐகானை பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய கேரக்டர்களைத் தேடி, அதனுடன் பேசலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay