ஆப்பிள் மொபைலில் லாங் ஸ்கிரீன்-ஷாட் எடுப்பது எப்படி..?

Default Image
  • தற்பொழுது, அணைத்து வகையான மொபைளிலும் லாங் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும்.
  • ஐ-போனிலும் இதே லாங் ஸ்கிரீன் ஷாட்ஐ எடுக்க இயலும். ஆனால் சற்று கடினம்.

ஸ்க்ரீன்ஷாட் என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இந்த செயல்முறை மிகவும் எளிமையானது. பொதுவாக உங்கள் போனின் சில பட்டன்களை அழுத்துவதால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியும். இருப்பினும், ஒரு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஒரு படி மேலே சிந்தித்து ஸ்க்ரோலிங் ஸ்கிரீன் ஷாட்டை கொண்டு வந்தனர்.

இந்த வசதி, ஆப்பிள் போனிலும் உண்டு. ஆனால் இதன் செயல்முறை ஆண்ட்ராய்டு போனைக் காட்டிலும் சற்று கடினமானது. எனவே, ஐபோன் அல்லது ஐபாடில் முழு பக்க ஸ்கிரீன் ஷாட்டைப் எடுக்க என்பதை பற்றி நாம் காணலாம்.

ஐபோன், ஐபாடில் லாங் ஸ்கிரீன் ஷாட்டை எடுப்பதற்கான வழிமுறைகள்:

1. முதலில், உங்கள் போனில் iOS அல்லது iPadOS ஐ அப்டேட் செய்யுங்கள்.

2. நீங்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க விரும்பும் பக்கத்திற்கு செல்லுங்கள்.

3. இதிலும், வழக்கமான முறையில் வால்யூம் மற்றும் பவர் பட்டனை ஒன்றாக பிடித்து அழுத்தி ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவும். உங்களுடையது ஐபோன் 8 அல்லது அதற்கு முந்தைய மாடல் போன் என்றால், ஹோம் பட்டன் மற்றும் பவர் பட்டன் ஆகியவற்றை ஒன்றாக பிடித்து அழுத்தி ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவும்.

4. ஸ்க்ரீனின் கீழ் பகுதியில் இடது மூலையில் “இமேஜ் ப்ரீவ்யூ”(Image Preview) வரும். அதை அழுத்தவும்.

5. இதனால் உங்கள் ஸ்க்ரீன் ஷாட் இமேஜ் எடிட்டரில் திறக்கப்படும். அதில் மேல் வலது மூலையில் “ஃபுல் பேஜ்” விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்.

6. ஸ்க்ரீன் ஷாட்டை நீங்கள் சேவ் செய்ய விரும்பும் பகுதியை தேர்வு செய்து “கிராப்” ஐகானைத் தொடுங்கள்.

7. இதன்பிறகு உங்கள் போனில் இதனை சேமித்துக் கொள்ளலாம் அல்லது நேரடியாக உங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கு அல்லது மற்ற செயலிகளுக்கு PDF வடிவத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

8. ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்து கொள்ள, மேல் வலது மூலையில் இருக்கும் “ஷேர்” ஐகானைத் தொடுங்கள். அதன்பின், நீங்கள் விரும்பம் நபருக்கு ஷேர் செய்யலாம்.

9. ஸ்கிரீன்ஷாட்டைச் சேமிக்க, மேல் இடதுபுறத்தில் இருக்கும் “டன்” ஐகானைத் தட்டவும், பின்பு கோப்புகளை சேமிக்க “சேவ் PDF”  என்பதைத் தட்டவும்.

10. இடத்தை தேர்ந்தெடுத்து “சேவ்”(Save) ஐகானைத் தட்டவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்