மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் புகைப்படம் தரம் குறையாமல் இருக்க இந்த ஒரு வழியே போதும்!

Default Image

எங்கு சென்றாலும் எதையாவது போட்டோ எடுக்கும் பழக்கம்(நோய்) நமக்கு பரவி உள்ளது. தற்போதைய இளைய தலைமுறையினர் இதற்கு பெரிதும் அடிமையாகி உள்ளனர். நல்ல ஸ்மார்ட் போன் வைத்திருப்போர் சுலபமாக நல்ல புகைப்படத்தை எடுத்து முகநூல், வாட்சப் போன்றவற்றில் பதிவாக வெளியிடுவார்கள்.

ஆனால், என்னை போன்று மொக்கை போன் வைத்திருப்போருக்கு “ஷேரிங்” தான் ஒரே வழி. நம் நண்பரின் போனில் எடுத்த புகைப்படத்தை அப்படியே நமது போனிற்கு ஷேர் செய்து கொள்வோம். ஆனால், இதன் தரம் நிச்சயம் குறைந்திருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க எளிய வழி உள்ளது மக்களே!


புகைப்படம்
ஸ்மார்ட் போனில் எடுக்கப்படும் புகைப்படத்தை வேறொருவருக்கு அனுப்பும் போது அதன் குவாலிட்டி குறையாமல் அப்படியே இருக்க சில வழிகள் உள்ளது. அதற்கு முதலில் உங்களின் “file manager “-க்குள் நுழைந்து நீங்கள் எடுத்த புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளவும்.


மாற்றம் செய்ய…
அதன் பின் அந்த புகைப்படத்தின் வடிவத்தை மாற்ற வேண்டும். இதற்கு அந்த புகைப்படத்தின் பெயரை “rename” என்கிற ஆப்ஷனை தேர்வு செய்து அதில் உள்ள .jpg என்கிற வடிவத்தை .doc என மாற்றி அமைக்கவும். உதாரணத்திற்கு நீங்கள் எடுத்த புகைப்படத்தின் பெயர் chocolate.jpg என்றிருந்தால் அதை chocolate.doc என மாற்றி அமைக்கவும்.


இதன் பின் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம். இவ்வாறு செய்வதன் மூலம் புகைப்படத்தின் குவாலிட்டி குறையாது. மேலும், புகைப்படத்தை பெற்றவர் மீண்டும் .jpg என்கிற வடிவத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்