வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்புவது எப்படி.? முழு விவரம் இதோ.!

WhatsAppPay

மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயன்பாட்டை நாட்டில் உள்ள பல மக்கள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும், வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பவும், ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யவும் பயன்படுத்திவருகின்றனர். இதனை ஒரு படி மேலே கொண்டு சென்ற வாட்ஸ்அப் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த அம்சம் கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற எந்தவொரு பேமெண்ட் ஆப்ஸ்கள் இல்லாமலேயே நேரடியாக வாட்ஸ்அப் மூலம் எவருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவும் செய்யலாம், பெறவும் செய்யலாம். இந்த அம்சத்திற்காக வாட்ஸ்அப் பல வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ஓரம்போகும் வாட்ஸ்அப்.? ஆட்டத்தை ஆரம்பித்த கூகுள் மெசேஜ்.!

எஸ்பிஐ, ஆக்ஸிஸ், எச்டிபிசி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுடன் இணைந்து, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உருவாக்கிய நிகழ்நேர கட்டண முறையான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சமானது இயக்கப்படுகிறது. இதனால் வாட்ஸ்அப்பில் வேகமாக பேமெண்ட் செய்ய முடியும்.

வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சத்தை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு பேங்க் அக்கௌன்ட் இருக்க வேண்டும். அந்த அக்கௌன்டை யுபிஐயில் பத்தி செய்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரியாக முடித்த பின் வாட்ஸ்அப்பிள் உங்களால் பணம் அனுப்ப முடியும்.

வாட்ஸ்அப் பே அக்கௌன்டடை எவ்வாறு அமைப்பது.?

  • வாட்ஸ்அப்பைத் திறந்து அதில் வலது மேல் புறம் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
  • அதில் பேமெண்ட்ஸ் என்பதை தேர்வு செய்து உள்ளே செல்லவும்.
  • பிறகு அட் பேங்க் அக்கௌன்ட் (Add Bank Account) என்பதை கிளிக் செய்து, உங்களுடைய பேங்க் அக்கௌன்டை இணைக்கவும்.
  • பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் போன் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் சரிபார்க்கும்படி கேட்கும்.
  • உங்கள் எண் சரிபார்க்கப்பட்டதும், அந்த எண்ணுடன் தொடர்புடைய உங்கள் பேங்க் அக்கௌன்ட் காட்டப்படும்.

பணம் அனுப்புவது எவ்வாறு.?

  • உங்கள் பேங்க் அக்கவுண்ட் இணைத்தவுடன், நீங்கள் யாருக்கு பணம் செலுத்தி விரும்புகிறீர்களோ அந்த நபரின் சேட்டை திறக்க வேண்டும்.
  • அதில் இருக்கும் பேமெண்ட் ஆப்ஷனை கிளிக் செய்து சென்ட் மனி (Send Money) என்பதை கிளிக் செய்யவும்.
  • இதன் பிறகு நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் பேங்க் அக்கவுண்ட் தேர்வு செய்ய வேண்டும்
  • பிறகு யுபிஐ எண்ணை உள்ளீடு செய்து சென்ட் (Send) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்