உங்க ஐபோனை நீங்களே ரிப்பேர் பாக்கலாம்.! எப்படின்னு தெரியுமா.?
கடந்த 2022ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள் மற்றும் மேக் போன்றவற்றை பயனர்களே சரி செய்து கொள்ளும் ‘செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் எஸ்இ போன்ற மாடல்களுக்கு மட்டுமே இந்த திட்டம் இருந்தது. பிறகு ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்கள் வரை விரிவுபடுத்தியது.
இப்போது, செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் திட்டத்தை 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ, 15 இன்ச் மேக்புக் ஏர், மேக் மினி, மேக் ப்ரோ, மேக் ஸ்டுடியோ மற்றும் ஐபோன் 15 சீரிஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. அதேபோல, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற 9 நாடுகளில் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டது.
வெறும் ரூ.6,000 பட்ஜெட்.. 4 ஜிபி ரேம்.. 4,000mAh பேட்டரி.! ஐடெல் A05s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இனி குரோஷியா, டென்மார்க், கிரீஸ், நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட 24 ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆப்பிள் பயனர்களுக்கும் ஆப்பிளின் செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் சேவை கிடைக்கிறது. இதன்மூலம் செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் சேவையானது இப்போது 33 நாடுகள் மற்றும் 24 மொழிகளில் மொத்தமாக 35 ஆப்பிள் தயாரிப்புகளுக்குக் கிடைக்கிறது.
இது கூடவே ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய பயன்பாட்டையும் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். Apple Diagnostics என்கிற இந்த பயன்பாட்டின் மூலம் பயனர்கள் தங்கள் சாதனங்களில் எந்தெந்தப் பகுதிகளைச் சரிசெய்ய வேண்டும் என்பதைக் கண்டறிய முடியும்.
தேதி குறிச்சாச்சு.! இந்தியாவில் களமிறங்குகிறது ரெட்மி நோட் 13 சீரிஸ்..!
ஆப்பிள் தங்களது சாதனைகளை பயனர்களே சரி செய்து கொள்ளும் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை. வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்படலாம். இத்திட்டத்தின் கீழ், பயனர்கள் பழுதுபார்ப்பதற்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களையும், அதனை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விளக்க குறிப்புகளையும் ஆப்பிள் வழங்குகிறது.
செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் சேவையை எப்படி அணுகுவது.?
- தங்கள் சொந்த ஐபோன்களை பழுதுபார்க்க விரும்பும் பயனர்கள், டிஸ்ப்ளே, பேட்டரி, கேமரா மற்றும் பல தேவையான பாகங்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
- பிறகு ஆப்பிள் இந்த பாகங்களை பயனருக்கு அனுப்பும்.
- மேலும், பயனர்கள் வாங்கக்கூடிய உதிரிபாகங்களில் தள்ளுபடியைப் பெற விரும்பினால், சேதமடைந்த பாகங்களை ஆப்பிள் நிறுவனத்திற்குத் திருப்பித் அனுப்ப வேண்டும்.