வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் இந்நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால், நாம் செய்கின்ற ஒரு சில தவறுகளால் வேலை கிடைக்காமல் போய் விடுகிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரெஸ்யூமே-வை (Resume) கூறலாம்.
நம்மை பற்றிய தகவல்களை இதில் சரிவர கொடுக்கவில்லை என்றால், முதல் முயற்சியிலே தோல்வி தான் கிடைக்கும். இந்த பிரச்சினைக்கும் நம்மிடம் தீர்வு உள்ளது மக்களே.
என்ன செயலி
ரெஸ்யூமே-வை மிக நேர்த்தியான முறையில் தயார் செய்ய பலவித செயலிகள் பிளேஸ்டோரில் உள்ளன. ஆனால், இவற்றில் மிக சில மட்டுமே சரிவரவும், தெளிவான முறையிலும் நமக்கு ரெஸ்யூமே-வை தயாரித்து தருகின்றன. இந்த வகையில் மிக சிறந்த செயலியாக ‘My Resume Format’ என்கிற செயலி உங்களுக்கு உதவுகிறது.
என்னென்ன செய்யலாம்?
இந்த செயலியை பயன்படுத்தி நம்மால் மிக எளிதான முறையில் நமக்கான ரெஸ்யூமே-வை தயாரித்து கொள்ளலாம். உங்களை பற்றிய சிறு சிறு தகவல்களை தெளிவாகவும், சரியாகவும் கொடுத்தால் மட்டும் போதுமானது. மேலும், இதை பதிவிறக்கமும் செய்து கொள்ள இயலும்.
தளத்தின் லிங்க்?
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அருமையான முறையில் இந்த செயலியை வடிவமைத்துள்ளனர். இதன் இணைய முகவரி: https://www.myresumeformat.com/ இதுதான். உங்களது ரெஸ்யூமே-வை PDF முறையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிறப்பான ரெஸ்யூமே-வை தயாரித்து வெற்றியை உங்களுக்கு உரித்தாக்குங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…