இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயன்பாடுகளில் ஒன்றான கூகுள்பே (Google Pay), வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் (Non-Banking Financial Corporation (NBFC)) கைகோர்த்து இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்காக சாச்செட் கடன்களை (Sachet loan) வழங்கி வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூகுளின் வருடாந்திர கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வின் போது, கூகுள் இந்தியா நிறுவனம் கடன்களை வழங்குவதாகவும், அந்த கடன் தொகையை கூகுள்பே மூலம் பெறலாம் என்றும் தெரிவித்தது. இந்த கடன் சேவைகளை வழங்க தொழில்நுட்ப நிறுவனமான டிஎம்ஐ (DMI) ஃபைனான்ஸ் உடன் கூகுள் இந்தியா இணைந்துள்ளது.
இந்த சாச்செட் லோன் வசதி மூலம் ரூ.15,000 முதல் கடன் வாங்கிக் கொள்ளலாம். அதனை 111 ரூபாய்க்கும் குறைவாகக் கூட எளிய முறையில் கடன் தொகையைத் திருப்பி செலுத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சாசெட் லோன்கள் மூலம் அவசர மருத்துவப் பில்கள் அல்லது பிற செலவுகள் போன்ற எதிர்பாராத செலவுகளுக்கு பணம் தேவைப்படும்போது செலுத்துவதற்கு சிறந்த வழி ஆகும்.
சாச்செட் லோன் என்பது 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை திருப்பி செலுத்தக்கூடிய காலம் கொண்ட ஒரு கடன் வசதியாகும். இதில் ரூ.10,000 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான கடன் தொகையை பெறலாம். இந்த வசதி உடனடி நிதி தேவைகளை நிவர்த்தி செய்கிறது. மற்றும் சிறு வணிகர்களுக்கு இது பெரும் உதவியாகவும் இருக்கிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…