கூகுள்பேவில் கடன் வாங்குவது எப்படி.? முழுவிவரம் இதோ.!

GooglePay

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயன்பாடுகளில் ஒன்றான கூகுள்பே (Google Pay), வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் (Non-Banking Financial Corporation (NBFC)) கைகோர்த்து இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்காக சாச்செட் கடன்களை (Sachet loan) வழங்கி வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூகுளின் வருடாந்திர கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வின் போது, கூகுள் இந்தியா நிறுவனம் கடன்களை வழங்குவதாகவும், அந்த கடன் தொகையை கூகுள்பே மூலம் பெறலாம் என்றும் தெரிவித்தது. இந்த கடன் சேவைகளை வழங்க தொழில்நுட்ப நிறுவனமான டிஎம்ஐ (DMI) ஃபைனான்ஸ் உடன் கூகுள் இந்தியா இணைந்துள்ளது.

இந்த சாச்செட் லோன் வசதி மூலம் ரூ.15,000 முதல் கடன் வாங்கிக் கொள்ளலாம். அதனை 111 ரூபாய்க்கும் குறைவாகக் கூட எளிய முறையில் கடன் தொகையைத் திருப்பி செலுத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சாசெட் லோன்கள் மூலம் அவசர மருத்துவப் பில்கள் அல்லது பிற செலவுகள் போன்ற எதிர்பாராத செலவுகளுக்கு பணம் தேவைப்படும்போது செலுத்துவதற்கு சிறந்த வழி ஆகும்.

சாச்செட் லோன் என்பது 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை திருப்பி செலுத்தக்கூடிய காலம் கொண்ட ஒரு கடன் வசதியாகும். இதில் ரூ.10,000 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான கடன் தொகையை பெறலாம். இந்த வசதி உடனடி நிதி தேவைகளை நிவர்த்தி செய்கிறது. மற்றும் சிறு வணிகர்களுக்கு இது பெரும் உதவியாகவும் இருக்கிறது.

சாச்செட் லோனுக்கு எப்படி விண்ணப்பிப்பது.?

  • சாச்செட் லோனைப் பெற பயனர்கள் கூகுள்பே மற்றும் பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும்.
  • முதலில் கூகுள்பே பிஸ்ஸின்ஸ் (Google Pay Business) பயன்பாட்டைத் திறக்க வேண்டும்.
  • இதற்குப் பிறகு லோன் பகுதிக்குச் சென்று ஆஃபர்ஸ் என்பதைக் கிளிக் செய்து, கடன் தொகையை உள்ளிடுவதன் மூலம் தொடரவும்.
  • அடுத்து கடன் வாங்குபவரின் பெயர், முகவரி மற்றும் வருமானம் போன்ற சில அடிப்படை தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
  • கேஒய்சி உட்பட அனைத்து படிகளும் முடிந்த பிறகு உங்கள் கடன் தொகை கூகுள் பிளே கணக்கில் வரவு வைக்கப்படும்.
  • இந்த கடன் தொகையை பயனர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட் அல்லது யுபிஐ பேலன்ஸை பயன்படுத்தி திருப்பி செலுத்த முடியும்.
  • இந்த கடனை தவணை முறையில் திருப்பி செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
TVK Vijay - BJP Senior Leader H Raja
tvk vijay
Union minister Piyush goyal say about StartUps
Vijay gets Y category security
Indian Astronaut Shubhanshu Shukla
BJP State President K Annamalai