உங்களின் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதை கண்டறிய 6 எளிய வழிகள் இதோ..!

Default Image

விஞ்ஞான வளர்ச்சி விண்ணை தொட்டுவது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அதன் தாக்கம் ரொம்ப மோசமான விளைவை நம்மிடையே ஏற்படுத்தி வருகிறது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இன்று நம்மால் எந்த வித கேட்ஜெட்ஸ் இல்லாமல் உயிர் வாழ முடியுமா..? என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகவே உள்ளது. அப்படியே மீறி நாம் இந்த மொபைல், கணினி போன்ற சாதனங்களை பயன்படுத்தினாலும் அவற்றில் நமக்கான குறைந்த பட்ச பாதுகாப்புகூட கிடைப்பதில்லை.

எதை தொட்டாலும் “ஹேக்” (hack) என்கிற மாய வலைக்குள் இன்று எல்லோருமே மாட்டி கொண்டுள்ளோம். நாம் பயன்படுத்தும் சாதனங்கள் தான் நம்மை இந்த நிலைக்கு தள்ளுகிறது. நம்மை விட ஒரே ஒரு பொருளின் மீது தான் அதிக அக்கறை காட்டுவோம். அது வேற எதுவும் இல்லை. நம்முடைய மொபைல் தான். இந்த மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா..? என்பதை ஒரு சில எளிய அறிகுறிகளின் மூலம் நாம் கண்டறிந்து விடலாம் என புகழ்பெற்ற ஒயிட் ஹேக்கர்கள் (White Hackers) சிலர் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை இனி அறிவோம்.

எண்கள்
பொதுவாக நம் மொபைலில் இருக்க கூடிய கால் லிஸ்டை நாம் சரி பார்ப்பது கிடையாது. இந்த கால் லிஸ்டில் நமக்கு தெரியாத நபரின் எண்கள் உங்களை அறியாமலே இருந்தால் கொஞ்சம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என உங்கள் மொபைல் உங்களுக்கு எச்சரிக்கை மணி தருகிறது. இது போன்று தெரியாத நபரின் எண்கள் அடிக்கடி இருந்தால் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

செயல்பாடு
உங்கள் மொபைல் தானாகவே ரீபூட் ஆகி ஆன் ஆகிறதா..? இது மிக பெரிய எச்சரிக்கையாகும். இப்படி ஆவதற்கு முன் எல்லாவித அப்பிளிகேஷனையும் இது திறந்து விட்டு தான் மூடிக்கொள்ளும். அப்போது உங்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.

பிரச்சினை
திடீரென்று யாருக்கு பேசினாலும் ஒரு வித இரைச்சலை நீங்களோ அல்லது எதிர் புறத்தில் உள்ளவரா அடிக்கடி உணர்ந்தால் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டதற்கு வாய்ப்புகள் அதிகம்.

பேட்டரி
மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதை எளிதாக பேட்டரியை வைத்து கண்டறியலாம். அதாவது, உங்களின் மொபைல் பேட்டரி திடீரென்று வேகமாக குறைந்தாலோ, மொபைல் இதனால் அதிக வெப்பம் ஆனாலோ மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.

டேட்டா
நாம் பயன்படுத்துவதை அதிக அளவில் டேட்டா தீர்ந்து போனால் அந்த மொபைல் ஹேக் செய்யப்பட்டதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், பொது இடத்தில் இலவசமாக கிடைக்க கூடிய வை-ஃபை களை பயன்படுத்துவதாலும் இந்த நிலை உங்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

ஆப்ஸ்
பிளே ஸ்டோரில் இருக்க கூடிய எல்லா வகையான ஆப்பிளிகேஷன்களும் உங்கள் மொபைலில் இருக்க வேண்டும் என்கிற உங்கள் ஆசை தான் உங்களின் மொபைல் ஹேக் செய்யப்படுவதற்கு மிக முக்கிய காரணம். தேவையற்ற ஆஃப்ஸ்களை பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஹேக்கர்கள் உங்களது மொபைலை சுலபமாக ஹேக் செய்து விடுகின்றனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்