இரயில்ல போற எல்லாருக்குமே வாட்ஸாப் மூலமாக ஒரு நல்ல செய்தி காத்திட்டு இருக்கு! என்னனு தெரிஞ்சிக்கோங்க மக்களே!
இரயில் பயணம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை எதோ ஒரு விதத்தில் அலாதி பிரியம் தான். முதல் காதலை போன்றே முதல் முதலில் இரயிலில் பயணம் செய்ததை யாராலும் மறக்க இயலாது. ஜில்லென்று காற்று, அழகிய தென்றால், பலதரப்பட்ட மக்கள்… இப்படி எண்ணற்ற புரிதல்கள் இரயில் பயணத்தில் நமக்கு உண்டாகும்.
இவை எல்லாவற்றையும் அனுபவிக்க சரியான நேரத்தில் நாம் இரயிலை அடைய வேண்டும் அல்லவா..? எப்போது இரயில் புறப்படுகிறது, தற்போது எங்குள்ளது, எந்த நடைமேடையில் தற்போது வரவிருக்கிறது போன்ற பல தகவல்கள் தெரியாமல் இத்தனை நாட்களாக நாம் திணறி கொண்டே இருந்தோம். இனி இந்த பிரச்சினைக்கு தீர்வு கட்ட புது வழியை இந்திய இரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அவதி
மக்கள் இத்தனை நாட்களாக பட்ட கஷ்டங்கள் அனைத்திற்குமே, இன்று சிறந்த வழியை தொழிற்நுட்பத்தின் மூலமாக இந்திய இரயில்வே துறை அடைந்துள்ளது. இரவில் பற்றிய தகவல்களை சரி வர பெற இயலாமல் பலர் அவதிப்பட்ட காலத்தை இனி மறந்து விடலாம். இதற்கு தீர்வாக ஒரு புது எண்ணை இரவில்வே துறை வழங்கியுள்ளது.
என்ன சேவை?
இந்திய இரயில்வே துறை புது எண்ணை அறிவித்துள்ளது. இந்த எண்ணை நம் மொபைலில் பதவி செய்து நம் நண்பரிடம் கேட்பது போன்று இரயில் பற்றிய தகவல்களை இதில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதற்கு 7349389104 என்ற எண்ணை உங்கள் மொபைலில் பதிவு செய்தால் மட்டும் போதுமானது.
வசதிகள்
இந்த எண்ணை பதிவு செய்த பின், சாதாரணமாக வாட்ஸாப் செயலியை பயன்படுத்தி இந்த எண்ணிற்கு சாட் செய்து பேசலாம். இதன் மூலம் இரயில் எங்குள்ளது, எத்தனை மணிக்கு கிளம்பியது, எப்போது வந்து இறங்கும் போன்ற தகவல்களை நம்மால் பெற இயலும். மக்களின் சேவையை எளிதான முறையில் வாட்ஸாப் மூலம் இந்திய இரயில்வே வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.