Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் அண்மையில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். மெட்டா நிறுவனம் சார்பாக, முன்னதாக மெட்டா குவெஸ்ட் (Meta Quest) VR (Virtual Reality) ஹெட்செட்களை அடுத்தடுத்து அப்டேட் செய்து மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) VR ஹெட்செட்களுக்கு போட்டியாக, அதனை ஒப்பிடுகையில், குறைந்த விலையில் அதே அளவு வசதிகளை கொண்டு மெட்டா நிறுவனம் தனது நிறுவன VR ஹெட்செட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மெட்டா குவெஸ்ட் v3இன் விலை சுமார் 79,000 ரூபாய் ஆகும். ஆப்பிள் விஷன் ப்ரோவின் விலை சுமார் 3 லட்ச ரூபாயை தாண்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த VR ஹெட்செட்களானது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் கவரும் வகையில் அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தி நாம் நிழல் உலகில் இருப்பது போல நம்மை உணரவைத்து கொள்ளலாம். அதே போல நிஜ உலகில் நிழல் உலகையும் இணைத்து கொள்ளலாம். அதாவது, வீடியோ கேம் விளையாடுகையில், அந்த வீடியோ கேம் உள்ளே நாம் இருப்பது போன்ற உணர்வை அப்படியே தரும். மேலும், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போனில் நாம் சமூக வலைதளத்தை, புதுப்படத்தை பார்க்கையில் அதற்கு தனி திரைகள் மற்ற மின்னணு சாதனங்கள் தேவையில்லை. இந்த ஒரு மெட்டா குவெஸ்ட் VR ஹெட்செட் மூலம் அத்தனையும் கட்டுப்படுத்தி கொள்ளலாம்.
இந்த மெட்டா குவெஸ்ட் VR ஹெட்செட்டை, மெட்டா நிறுவனமானது, ஆசுஸ் (Azus) ரிபப்ளிக் கேமிங் , லெனோவா, எக்ஸ் பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வெளியிட்டு வருகிறது. ஆசுஸ் நிறுவனமானது கேமிங் பகுதியையும், லெனோவா நிறுவனம் அதன் முக்கிய பாகங்கள் தயாரிப்பிலும், எக்ஸ் பாக்ஸ் மற்ற பாகங்கள் மென்பொருள் நிறுவுவதிலும் இணைந்து செயல்படுகிறது.
மெட்டா நிறுவனம் தயாரித்துள்ள Meta Horizon OS எனும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மக்களுக்கு இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று அவர்களை கவர வேண்டும் என்பதற்காகவே மெட்டா நிறுவனம் கூகுள் பாதை போன்ற ஓர் திட்டத்தை தெரிவித்துள்ளது.
அதாவது, கூகுள் தனது சேவைகளை மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருவது போல, மெட்டா நிறுவனம் VR ஹெட்செட் இயங்குதளத்திற்கு என பிரேத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Meta Horizon OS இயங்குதளத்தை மற்ற தொழில்நுட்ப மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், Meta Horizon OS இயங்குதளத்தை மற்ற மின்னணு பொறியாளர்கள் பயன்படுத்துவது, அதனை புதிய வசதிகள் கொன்டு மேம்படுத்துவதும் எளிது என்றும் மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால், இதுகுறித்த வணிக விதிமுறைகளை மெட்டா நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றும், விரையில் அதற்கான அறிவிப்பும் மெட்டா நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…