Honor Play 8T: 6000mAh பேட்டரி, 12GB ரேம்.! ஹானரின் புதிய அறிமுகம்..என்ன மாடல் தெரியுமா.?

Honor Play 8T

ஹானர் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனான ஹானர் பிளே 8டி-ஐ சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த தகவல் சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி  ஹானர் பிளே சீரிஸில் 7டி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

இதன்பிறகு அக்டோபர் 10ம் தேதி  ஹானர் ப்ளே 50 பிளஸ் என்ற 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை நாளை (அக்டோபர் 17ம் தேதி) சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த பிளே 8டி ஆனது ஹானர் ப்ளே 50 பிளஸ் போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே

ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போன் ஆனது ஹானர் ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போனில் இருப்பது போல, 1080 x 2400 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.8 இன்ச் எஃப்எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வரலாம். அதோடு இந்த டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 850 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸுடன் வரலாம். இதன் டிசைனை பார்க்கையில் பக்கவாட்டில்  பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கலாம்.

Honor Magic VS2: 50 எம்பி கேமரா, 5000 MAh பேட்டரி..! அறிமுகமானது ஹானரின் புதிய மேஜிக் விஎஸ் 2.!

பிராசஸர்

ஹானர் ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போனில் மாலி-ஜி57 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமென்சிட்டி 6020 சிப்செட் உள்ளது. அதேபோல, ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனிலும் மீடியாடெக் டைமென்சிட்டி 6020 சிப்செட் பொறுத்தப்படலாம். இதில் ஆன்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மேஜிக் ஓஎஸ் 7.2 உள்ளது.

கேமரா

இதில் பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டூயல் கேமரா பொறுத்தப்படலாம். முன்புறம் செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா உள்ளது. ஹானர் ப்ளே 50 பிளஸில் 10x டிஜிட்டல் ஜூம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி போட்டோசென்சிட்டிவ் டெப்த் என டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதோடு ஹை-ரெசல்யூஷன் கொண்ட ஆடியோ வசதியுடன் டூயல் ஸ்பீக்கர்கள், 3.5மிமீ ஆடியோ ஜாக், பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், புளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் பிற அம்சங்களுடன் வருகிறது.

பேட்டரி

ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்த 6000 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்படலாம். இதனை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போனிலும் 6000 mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. ஆனால், இதில் பேட்டரியை சார்ஜ் செய்ய 60 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனை 45 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்ய முடியும்.

OPPO A2x: 6.56 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி.! அறிமுகமானது ஒப்போவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

ஸ்டோரேஜ் மற்றும் விலை:

ஹானர் பிளே 8டி ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ப்ளே 50 பிளஸ் போன்றே இருக்கும் என்பதால் இரண்டு வேரியண்ட்டுகளில் அறிமுகமாகலாம். . அதன்படி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என அறிமுகமாகலாம்.

ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போனில் 2 ஜிபி ரேம் வேரியண்ட் 1,399 யுவான் (கிட்டத்தட்ட ரூ.37,999) என்ற விலையில் விற்பனையாகிறது. 8 ஜிபி ரேம் வேரியண்ட் விலையை ஹானர் இன்னும் வெளியிடவில்லை. தற்போது வரை மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்