Honor Play 8T: 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா.! ஹானரின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்..!

Honor Play 8T

சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் வெளியான தகவலின் படி, ஹானர் நிறுவனம் அதன் பிளே சீரிஸில் புதிய ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி  ஹானர் பிளே சீரிஸில் 7டி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, அக்டோபர் 10ம் தேதி ஹானர் ப்ளே 50 பிளஸ் என்ற 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிஸ்பிளே

ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போன் ஆனது 2412 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.8 இன்ச் மல்டி-டச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதோடு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வரும் இந்த டிஸ்பிளே, 16.7 மில்லியன் வண்ணங்களை ஒன்றாக இணைத்துக் காட்டி உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதில் 850 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் உள்ளது. இதில் பக்கவாட்டில்  பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.

GalaxyZFlip5: புதிய மஞ்சள் நிறத்துடன் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போன்.!

பிராசஸர்

மாலி-ஜி57 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் டைமென்சிட்டி 6080 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்விட்ச் குளோன், ஸ்மார்ட் மல்டி-விண்டோ, ஸ்மார்ட் விஷன், ஆப் லாக், ஆப் குளோன், ஒன் ஹாண்ட் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன.

இதில் ஆன்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மேஜிக் ஓஎஸ் 7.2 உள்ளது. இதற்கு முன்னர் அறிமுகம் ஆன ஹானர் ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போனில் மாலி-ஜி57 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமென்சிட்டி 6020 சிப்செட் உள்ளது.

கேமரா

இதில் பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதன்படி, 10x டிஜிட்டல் ஜூம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா உள்ளது. டைம்-லாப்ஸ் போட்டோ, வாட்டர்மார்க், மல்டி-லென்ஸ் வீடியோ, மைக்ரோ மூவி போன்ற கேமரா அம்சங்கள் உள்ளது.

பேட்டரி மற்றும் பிற அம்சங்கள்

199 கிராம் எடைகொண்ட ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பயன்பாட்டிற்காக 6000 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 35 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதோடு ஹை-ரெசல்யூஷன் கொண்ட ஆடியோ வசதியுடன் டூயல் ஸ்பீக்கர்கள், 3.5மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் 5.1, ஜிபிஎஸ், ப்ராக்ஸிமிட்டி லைட் சென்சார் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

Xiaomi 14: 50 எம்பி டிரிபிள் கேமரா, 4,600 MAh பேட்டரி..! விரைவில் அறிமுகமாகும் சியோமியின் புதிய மாடல்.!

ஸ்டோரேஜ் மற்றும் விலை

ஸ்ட்ரீமிங் சில்வர், இன்க் ஜேட் கிரீன், பாண்டஸி நைட் பிளாக் என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள ஹானர் பிளே 8டி ஆனது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில் 8 ஜிபி வேரியண்ட் 1,099 யுவான் (ரூ.12,500) என்ற விலையிலும், 12 ஜிபி வேரியண்ட் 1,299 யுவான் (ரூ.14,800) என்ற விலையிலும் விற்பனைக்கு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Rahul Gandhi
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque