ஹானர் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ஹானர் ப்ளே 50 பிளஸ் என்ற 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஹானர் ப்ளே 40 பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதன்பிறகு ஒரு வருடம் கழித்து ஹானர் ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. அதன்படி, ப்ளே 40 பிளஸ் ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய அம்சங்களில் சிலவற்றை மாற்றம் செய்து, ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
டிஸ்பிளே
இதில் இருக்கும் 1080 x 2400 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.8 இன்ச் அளவுள்ள எஃப்எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 850 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் உள்ளது. இதனால் சூரிய ஒளியில் கூடத் தெளிவாகப் பார்க்க முடியும்.
பிராசஸர்
ஹானர் ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போனில் மாலி-ஜி57 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமென்சிட்டி 6020 சிப்செட் உள்ளது. இதனால் கேம் விளையாடும்போதோ அல்லது ஏதாவது பயன்பாடுகளை பயன்படுத்தும்போதோ எந்த விட தடங்களும் இருக்காது. இதில் ஆன்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மேஜிக் ஓஎஸ் 7.2 உள்ளது.
கேமரா
இதில் இருக்கும் கேமரா அமைப்பைப் பொறுத்தவரையில் பின்புறம் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய 10x டிஜிட்டல் ஜூம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா. 2 எம்பி போட்டோசென்சிட்டிவ் டெப்த் சென்சார் என டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதோடு, முன்புறம் தெளிவான செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8 எம்பி கேமரா உள்ளது. ப்ளே 50 பிளஸ் ஹை-ரெசல்யூஷன் கொண்ட ஆடியோ வசதியுடன் டூயல் ஸ்பீக்கர்கள், 3.5மிமீ ஆடியோ ஜாக், பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், புளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் பிற அம்சங்களுடன் வருகிறது.
பேட்டரி
199 கிராம் எடை கொண்ட இந்த ப்ளே 50 பிளஸ் போனின் மிக முக்கியமான அம்சம் இதில் கொடுக்கப்பட்டுள்ள 6000 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி ஆகும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ஸ்டோரேஜ் மற்றும் விலை:
மேஜிக் நைட் பிளாக், மோ யூகிங், ஸ்டார் பர்பில் மற்றும் ஸ்ட்ரீமிங் சில்வர் போன்ற நான்கு வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன், 2 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அதன்படி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகள் உள்ளன. இதில் 12 ஜிபி ரேம் வேரியண்ட் 1,399 யுவான் (கிட்டத்தட்ட ரூ.37,999) என்ற விலையில் உள்ளது.
8 ஜிபி ரேம் வேரியண்ட் விலையை ஹானர் இன்னும் வெளியிடவில்லை. இந்த ஸ்மார்ட்போன்களை ஹானரின் அதிகாரப்பூர்வ சீன இணையதளம் மூலம் சீனாவில் உள்ள ஸ்டோர்களில் வாங்கிக் கொள்ளலாம். தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…