தொழில்நுட்பம்

Honor Magic VS2: 50 எம்பி கேமரா, 5000 mAh பேட்டரி..! அறிமுகமானது ஹானரின் புதிய மேஜிக் விஎஸ் 2.!

Published by
செந்தில்குமார்

ஹானர் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேஜிக் வி2 என்ற மெல்லிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, மற்றொரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஹானர் மேஜிக் விஎஸ் 2 ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட மேஜிக் விஎஸ் போனை விட கொஞ்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனோடு சேர்த்து ஹானர் வாட்ச் 4 ப்ரோவும் அறிமுகமாகியுள்ளது.

டிஸ்பிளே

இந்த ஸ்மார்ட்போன் மேஜிக் விஎஸ் போனின் மாறுபாடு என்பதால் இது 2344 x 2156 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 7.92 இன்ச் அளவுள்ள ஃபோல்டபிள் ஓஎல்இடி மெயின் டிஸ்ப்ளே மற்றும் வெளிப்புறம்  2376 x 1060 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.43 இன்ச் அளவுள்ள ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. இந்த இரண்டு டிஸ்பிளேவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2100 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளதால் பயன்படுத்துவதற்கு ஸ்மூத்தாகவும் தெளிவாகவும் இருக்கும்.

பிராசஸர்

மேஜிக் விஎஸ் 2 ஆனது அட்ரினோ 730 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் ஆன்ட்ராய்டு 13 அடிப்படையிலான மமேஜிக் ஓஎஸ் 7.2 உள்ளது. கைரோஸ்கோப், கிராவிட்டி சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், காம்பஸ், ஹால் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற சென்சார்கள் உள்ளன.

கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 எம்பி மெயின் கேமரா, 20 எம்பி டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) அம்சத்துடன் அதிகபட்சம் 40x வரை டிஜிட்டல் ஜூம் செய்ய முடியும்.

முன்புறத்தில் செல்ஃபிக்காக 16 எம்பி கேமரா உள்ளது. இந்த கேமரா மூலம் 4k வரையிலான தெளிவுடன் கூடிய விடியோவை பதிவு செய்ய முடியும். இதில் ஸ்லோ மோஷன், பனோரமா, ஃபில்டர்கள், வாட்டர்மார்க்ஸ், ஸ்மைலி ஃபேஸ் கேப்சர், வாய்ஸ்-ஆக்டிவேட்டட் போட்டோகிராபி, டைம் லேப்ஸ் ஷூட்டிங், டாகுமெண்ட் ஸ்கேனிங், மைக்ரோ மூவி என பல அம்சங்கள் உள்ளன.

பேட்டரி

229 கிராம் எடை கொண்ட இந்த மேஜிக் விஎஸ் 2 ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பயன்பாட்டிற்காக 5000 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்டுடன் கூடிய 66 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் பேட்டரியை 30 முதல் 45 நிமிடங்களில் நூறு சதவீதம் சார்ஜ் செய்யமுடியும்.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

கிளேசியர் ப்ளூ, கோரல் பர்பிள், வெல்வெட் பிளாக் என மூன்று வண்ணங்களில் வெளியான இந்த மேஜிக் விஎஸ் 2 ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என 2 வேரியண்ட்டுகளில் அறிமுகமாகியுள்ளது. இதில் 12 ஜிபி வேரியண்ட் 6999 யுவான் (கிட்டத்தட்ட ரூ.79,820) என்ற விலையிலும், 16 ஜிபி வேரியண்ட் 7699 யுவான் (கிட்டத்தட்ட ரூ.88,399) என்ற விலையிலும் வெளியாகியுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

18 minutes ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

24 minutes ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

39 minutes ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

1 hour ago

கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…

2 hours ago

பாலியல் வழக்கு விசாரணை சந்தேகங்களை எழுப்புகிறது! அண்ணாமலை பதிவு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago