பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) நிகழ்வின் போது, ஹானர் மேஜிக் 6 சீரியஸ் மற்றும் ஹானர் மேஜிக் V2 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்ப உலகத்தில் ஒவ்வொரு நாளும் புது புது கண்டுபிடிப்புகள், புது புது டெக்லானாஜி அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் மேஜிக் 6 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்தது அந்நிறுவனம். அதன்படி, ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான MagicOS 8.0 ஸ்கின் மூலம் இயங்குகிறது. அதுபோன்று, மற்றும் Qualcomm-இன் Snapdragon 8 Gen 3 SoC மூலம் இயக்கப்படுகிறது.
Honor Magic 6 சீரியசில் 6.8-இன்ச் ஃபுல் எச்டி LTPO OLED டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின்புற கேமராக்களை கொண்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அவை தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 என்ற தரத்தை கொண்டுள்ளது. டிஸ்ப்ளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், டால்பி விஷன், எச்டிஆர் பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன்.
அதேபோல் செல்பிகளுக்கு ஏற்றவாறு 50எம்பி கேமரா + 3டி டெப்த்துடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுபோன்று, பின்புறத்தில் 180-மெகாபிக்சல் 2.5x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஆகிய 3 கேமராவுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் 5600 எம்ஏஎச் பேட்டரி, 80W வயர்டு மற்றும் 66W வயர்லெஸ் சூப்பர்சார்ஜை பெற்றுள்ளது.
அதே சமயத்தில் மற்றொரு ஸ்மார்ட்போன்களான ஹானர் மேஜிக் வி2 மடிக்கக்கூடிய வகையை கொண்டுள்ளது. இவைகள்ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MagicOS 7.2 மென்பொருள் மற்றும் Snapdragon 8 Gen 2 SoC மூலம் இயங்குகிறது. 6.43-இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே மற்றும் 120Hz ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 7.92-இன்ச் இன்னர் OLED டிஸ்ப்ளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
அவை ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC மூலம் இயக்கப்படுகின்றன, 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை ரோமுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, ஹானர் மேஜிக் 6 ப்ரோவின் விலை 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ரோம் சுமார் ரூ. 1,16,600 என்றும் இதுபோன்று, Honor Magic V2 RSR-இன் விலை 16GB RAM + 1TB ரோம் சுமார் ரூ. 2,42,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக ஆப்பிள் ஐபோன்களுக்கு போட்டியாக இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ சீரியசில் தனித்துவமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…