ஹானர் நிறுவனம் கடந்த டிசம்பர் 2ம் தேதி 6.8 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 108 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி கொண்ட ஹானர் எக்ஸ்7பி (Honor X7b) என்கிற ஒரு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உலக அளவில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து ஹானர் மேஜிக் 6 சீரிஸ் (Honor Magic 6 Series) போன்களில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் அறிமுகமானது வெளியிடப்படவில்லை. இருப்பினும் இணையத்தில் பரவி வரும் தகவல்கள், மேஜிக் 6 சீரிஸ் ஆனது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறுகிறது. இந்த தகவல்களின் படி, ஹானர் மேஜிக் 6 சீரிஸில் ஹானர் மேஜிக் 6, ஹானர் மேஜிக் 6 ப்ரோ மற்றும் ஹானர் மேஜிக் அல்டிமேட் என மூன்று மாடல்கள் இருக்கும்.
இதில் ஹானர் மேஜிக் 6 ப்ரோ (Honor Magic 6 Pro) ஸ்மார்ட்போனின் விவரங்கள் சமூக ஊடகமான எக்ஸில் வெளியாகியுள்ளது. இதனை டிப்ஸ்டர் சஞ்சு சவுத்ரி வெளிப்படுத்தியுள்ளார். அந்த தகவலின் படி, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2K ரெசல்யூஷன் கொண்ட ஓயாசிஸ் ஓஎல்இடி அமோலெட் டிஸ்பிளேவுடன் வரலாம். இதனால் கண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இந்த டிஸ்பிளேயில் ஐபோனில் உள்ளது போல டைனமிக் ஐலேண்ட் கட்டவுட் உள்ளது. அதோடு ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டைப் பெறும் அடுத்த ஸ்மார்ட்போன் ஹானர் மேஜிக் 6 ஆகும். இதற்கு முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 12, ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இந்த சிப்செட் உள்ளது. 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை ஓம்னிவிஷன் OV50k சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. இதில் 3டி ஃபேஸ் அன்லாக் (3D Face Unlock), கீஸ்ச்சர் ஆபரேஷன் (Gesture Operation), ஐ ட்ராக்கிங் (Eye tracking) என பல மேம்பட்ட சென்சார்கள் உள்ளன. கீஸ்ச்சர் ஆபரேஷன் மூலம் உங்கள் கண்களால் ஆப்ஸ்களைபயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
நீர் மற்றும் தூசில்லிருந்து பாதுகாக்க ஐபி68 ரேட்டிங் உள்ளது. ஆன்ட்ராய்டு 14 அடிப்படையிலான மேஜிக் ஓஎஸ் 8.0 உள்ளது. மேஜிக் 6 ப்ரோவின் பின்புறம் நேர்த்தியான நானோ-செராமிக் கிளாஸால் ஆனது. இது ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் லுக்கை அளிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இதில் சாட்டிலைட் காலிங் டெக்னாலஜி (Satellite calling Technology) வருகிறது.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…