Honor 90 5G: ஆரம்பமே ரூ.5,000 தள்ளுபடி..! பட்டையை கிளப்பும் அம்சத்துடன் களமிறங்கிய ‘ஹானர் 90 5ஜி!

Honor 90 5G

ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த, ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையானது இந்தியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்போன் கடந்த 14ம் தேதி வியாழக்கிழமை இந்தியா முழுவதும் அறிமுகமானது. அந்த வகையில் இன்று இ-காமர்ஸ் தளமான அமேசானில் 12 மணியளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஒன்பிளஸ், சாம்சங், நத்திங் போன்ற பல பிரீமியம் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வகைகளுடன் போட்டியிடும் வகையில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விற்பனையை சுவாரஸ்யமாக மாற்றுவதற்காக நிறுவனம் பல சலுகைகளை வழங்குகிறது. சலுகைகளுடன் பல அட்டகாசமான அம்சங்களைக் கொண்டுள்ள இந்த் போனில் என்னவெல்லாம் இருக்கிறது என்று இப்போது பார்ப்போம்.

டிஸ்பிளே: 

இதில் இருக்கும் 1.5k ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் அளவுள்ள வளைந்த அமோலெட் டிஸ்பிளே ஆனது வீடியோ மற்றும் படங்கள் பார்க்கும்போது சிறப்பான அனுபத்தை வழங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. இதனால் பயன்படுத்துவதற்கு ஸ்மூத் ஆக இருக்கும். இந்த டிஸ்பிளேவால் 1.07 பில்லியன் வண்ணங்கள் வரை காண்பிக்க முடியும். இதில் அதிகபட்சமாக 1600 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் உள்ளது. இதனால் சூரிய ஒளியில் கூடத் தெளிவாகப் பார்க்க முடியும்.

பிராசஸர்:

ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் உள்ளது. இந்த சிப்செட் அதிகமான செயல்திறனை வழங்குவதோடு, செயல்திறன் சமநிலை நிலையில் வைத்திருக்கும். இதனால் கேம் விளையாடும்போதோ அல்லது ஏதாவது பயன்பாடுகளை பயன்படுத்தும்போதோ எந்த விட தடங்களும் இருக்காது. இதில் ஆன்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மேஜிக் ஓஎஸ் 7.1 உள்ளது.

கேமரா: 

இதில் இருக்கும் கேமரா அமைப்பைப் பொறுத்தவரையில் பின்புறம் 200 எம்பி அல்ட்ரா க்ளியர் மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் மற்றும் மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா என ட்ரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. அதோடு, முன்புறம் தெளிவான செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 50 எம்பி கேமரா உள்ளது. இதில் 4k வரையிலான வீடியோவைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

பேட்டரி:

இவ்வாறு பல அம்சங்கள் உள்ள ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதற்காக 5000 mAh அளவிலான பெரிய பேட்டரி உள்ளது. இந்த பெரிய பேட்டரி யை சார்ஜ் செய்ய 66 வாட்ஸ் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனை 45 நிமிடங்களில் 0% இருந்து 100% வரை சார்ஜ் செய்ய முடியும்.

ஸ்டோரேஜ் மற்றும் விலை:

டயமண்ட் சில்வர், எமரால்டு கிரீன் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய மூன்று வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன், 2 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அதன்படி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகள் உள்ளன. இதில் 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.37,999 என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.39,999 என்ற விலையிலும் விற்பனையாக உள்ளது.

சலுகை:

ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு அமேசான் ரூ.3,000 உடனடி வங்கி தள்ளுபடியை வழங்குகிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இஎம்ஐ மூலம் வாங்கிபவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். பழைய போன்களுக்கு கொடுத்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் நிறுவனம் வழங்குகிறது.

Offers
Offers

மேலும், முக்கிய சலுகையாக ரூ.5000 மதிப்புள்ள கூப்பனையும் வழங்குகிறது. இந்த சலுகைகள் மூலமாக ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை 30,000 க்குள் குறைத்து வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)
18.11.2024 Power Cut Details