உங்கள் ஆதார் நம்பரில் எத்தனை சிம் கார்டுகள் இணைப்பில் உள்ளது.? கண்டறிய எளிய வழி…

Adhar linked Sim cards

டெல்லி: கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு புதிய தொலைதொடர்பு சட்டம் 2023ஐ அமல்படுத்தியது. இந்த சட்டதிருத்தத்தின் படி, தொலைத்தொடர்பு தொடர்பான பல்வேறு விதிகள் அமலுக்கு வந்தன. அதில் குறிப்பாக பயனாளர் ஒருவர் அவரது அடையாளத்தை கொண்டு 9 சிம்கார்டுகள் மட்டுமே வாங்கி கொள்ள முடியம்.

எத்தனை சிம் கார்டுகள் வாங்கலாம்.?

அதனை மீறினால் அபராதம் , அதன் மூலம் குற்றம் நிகழ்ந்தால் சிறை தண்டனை என கடுமையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் குறிப்பிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஒருவர் பெயரில் சிம் கார்டு வாங்கும் எண்ணிக்கை 6ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிக சிம் கார்டுகள் வாங்கினால்.?

இந்த விதிமுறைகளை முதல் முறையாக மீறினால் 50,000 ரூபாய் வரையில் அபராதமும், அடுத்த முறை மீண்டும் மீறினால் 2 லட்ச ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்றும், இதனை வைத்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை, 50 லட்ச ரூபாய் வரையில் அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம் என சட்டத்திருத்தம் அமலில் உள்ளது.

கண்டறியும் வழி :

இப்படியான சூழலில், உங்கள் அடையாள எண்ணை (ஆதார் எண்) கொண்டு எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிய ஓர் எளிய வழியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்காக குறிப்பிட்ட இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளை கிழே காணலாம்…

மத்திய தகவல் தொடர்பு துறையின் sancharsathi.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

Dept of Telecommunication
Dept of Telecommunication [File Image]
அந்த பக்கத்தில்  உங்கள் மொபைல் எண்ணுடன் உள்ள தொடர்புகளை தெரிந்து கொள்ளுங்கள் எனும் Know your mobile Connections எனும் தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

Dept of Telecommunication [File Image]
Dept of Telecommunication [File Image]
அதன் பின்னர், தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதற்கு கீழே காட்டப்பட்டு இருக்கும் எழுத்துக்களை (Captcha) டைப் செய்ய வேண்டும்.  பின்னர் உங்கள் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதனையும் உள்ளீடு செய்ய வேண்டும்.

Dept of Telecommunication [File Image]
Dept of Telecommunication [File Image]
அதன் பின்னர், உங்கள் மொபைல் எண்ணுடன் தொடர்பில் உள்ள ஆதார் எண்ணை கணக்கில் கொண்டு அதனுடன் இணைப்பில் உள்ள மொபைல் எண்களை நமக்கு காட்டும். அப்போது, நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்களை தவிர்த்து வேறு எண்கள் காட்டப்படுகிறதா என்பதை கவனித்து கொள்ளுங்கள்.

அவ்வாறு வேறு எண்கள் உங்கள் ஆதார் எண்ணுடன் தொடர்பில் இருந்தால் அதனை கிளிக் செய்து குறிப்பிட்ட புகாரை கிளிக் செய்து Submit செய்தால் நீங்கள் அளித்த புகாரின் விவரம் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு வந்துவிடும்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி உங்கள் அடையாள எண்ணுடன் (ஆதார்) இணைப்பில் உள்ள தொலைபேசி எண்களை கண்டறிந்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்