பெரும்பாலான இந்த இணையதளங்கள் ஹேக் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, நம் கடவுசொல் (பாஸ்வேர்டு) கசிய வாய்ப்புள்ளது. இந்த கடவுசொற்களின் மூலம் உங்கள் கணக்கு எளிதாக ஹேக் செய்யப்படுகின்றன. எனவே உங்கள் கடவுசொல் திருடப்பட்டுள்ளதா? என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
உங்கள் கடவுசொற்கள் இன்னும் பத்திரமாக இருக்கிறதா அல்லது அதை மாற்ற வேண்டுமா என்பதை கண்டறியும் வழிமுறைகளை இந்தக் கட்டுரையில் அளிக்கிறோம். அ
இந்த இணையதளத்தில் மறைவான தளமாக இருந்தால் கூட, அதன் பயனர்பெயர் மற்றும் கடவுசொல் அடங்கிய ஒருங்கிணைப்பைப் பெற முடிகிறது. இந்த இணையதளத்தின் மூலம் உங்கள் கடவுசொல் திருடப்பட்டுள்ளதா என்பதை மிக எளிதாக கண்டறிய முடியும்.
உங்கள் பயனர்பெயர் அல்லது கடவுசொல் பாதுகாப்பாக உள்ளதா என்பதை பரிசோதிக்க, ஹேவ் ஐ பீன் பவ்டு? என்ற இந்த இணையதளத்திற்கு சென்று, முகப்பு பக்கத்திலேயே ஒரு தேடல் பார் இருப்பதை காணலாம். அந்த தேடல் பாரில், உங்கள் மின்னஞ்சல் ஐடி-யை தட்டச்சு செய்துவிட்டு, பவ்டு? என்ற பொத்தான் மீது தட்டவும். இந்தத் தகவல் அளிக்கப்பட்ட பிறகு, இந்த இணையதளமானது உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு ஒரு விரிவான தேடலை நடத்தி, ஏதாவது தரவு மீறலில் எங்காவது ஈடுபடுத்தப்பட்டுள்ளதா? என்று சோதித்து பார்க்கும்.
உங்கள் கடவுசொல் பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில், ‘நல்ல செய்தி – எந்த பவ்வேஜும் கண்டறியப்படவில்லை! எந்த கணக்கு தரவு மீறல் பதிப்புகளும் இல்லை’ என்ற செய்தியைக் காணலாம். இதன்மூலம் உங்கள் கடவுசொல் பாதுகாப்பாக இருக்கிறது என்பதால், அதை மாற்ற வேண்டிய தேவையில்லை என்று அறிந்து கொள்ளலாம்.
உங்கள் பயனர்பெயர் / கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதை எப்படி அறியலாம்? உங்கள் கடவுசொல் வைத்து எங்காவது முயற்சி செய்யப்பட்டிருந்தால், ‘ஓ நோ – பவ்டு!’ என்ற செய்தியை நீங்கள் காணலாம். அதன்பிறகு, எத்தனை தளங்கள் மூலம் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல் பயன்படுத்தப்பட்டது என்ற எண்ணிக்கையை, இந்தத் தளம் காட்டுகிறது.
இந்த முடிவு கிடைத்த உடனே, உங்கள் கடவுசொலை நீங்கள் மாற்றிவிட வேண்டும். இதேபோல உங்களுக்கு உள்ள பல்வேறு பயனர்பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளின் பாதுகாப்பை, இந்த தளத்தில் பரிசோதித்து அறியலாம். அறிவிப்பைத் தேர்வு செய்து, பாதுகாப்பாக இருங்கள்’ இதையும் கடந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ‘நான் பவ்டு செய்யப்படும் போது எனக்கு அறிவி’ என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…