UPI மூலம் தவறான எண்ணிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? திரும்ப பெற என்ன செய்யலாம்?

UPI

UPI மூலம் தவறான மொபைல் எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டால், நீங்கள் அதை எவ்வாறு திரும்பப் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்கள் என்பது அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. அதில், இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுபிஐ (UPI-யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் UPI (யுபிஐ) இணைக்கப்பட்ட தங்கள் மொபைல் எண் மூலம், தவறான வங்கிக் கணக்கிற்குத் தவறுதலாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்திருக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், தவறான நபருக்கு தவறாக அனுப்பப்பட்ட பணத்தை திரும்பப் பெற பலர் முயற்சி செய்திருப்போம். ஆனால், அது எப்படி செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் பலர் உள்ளனர்.

இந்த நிலையில், இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்ளும்போது என்ன செய்வது என்று பார்க்கலாம். முன் பின், தெரியாத நபருக்கு அனுப்பட்ட பணத்தை மீட்டெடுக்க, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பரிமாற்றம் தவறானவது என்று  நிரூபிக்கப்பட்டவுடன், அந்த பரிவர்த்தனையைசரி பார்ப்பது வங்கியின் பொறுப்பாகும்.

இந்திய ரிசர்வ் வங்கி சொல்வதென்ன 

இந்திய ரிசர்வ் வங்கி இது பற்றி விளக்குகையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஒபட்சு மேன் (Ombudsman) என்ற திட்டத்தின் படி, குறைதீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளது. சரியான நேரத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்.

ஸ்மார்ட்போன்களுக்கு டஃப் கொடுக்க காத்திருக்கும் iQOO நியோ 9 ப்ரோ.! என்ன ஸ்பெஷல்.?

அதாவது தவறான எண்ணிற்கு UPI மூலம் பணம் அனுப்பினால் புகாரளித்த 2 நாள் (48 மணி நேரத்தில்) பணத்தை திரும்ப பெறலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  அதற்கு, தவறாக பணம் அனுப்பிய பேமெண்ட் விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கணக்கு எண்களுடன் வங்கியில் புகாரளிப்பது அவசியம்.

UPI பயன்படுத்தப்படும் ஆப்களின் ஹெல்ப்லைன் எண்கள்

Phone Pe -1800-419-0157

Google Pay – 080-68727374

Paytm – 0120-4456-456

BHIM – 18001201740

(NPCI) இடம் புகார் அளிக்கலாம்

UPI மூலம் தவறாக பணம் அனுப்பினால் நீங்கள் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா [National Payments Corporation of India] என்ற இணைத்தளத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும். அதில் கொடுக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் நிரப்பி சமர்ப்பிக்கவும். எல்லாம் சரியாக இருந்தால் பணம் திரும்ப கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்