Great Indian Festival: தயாரா இருங்க..75% வரை தள்ளுபடி நிச்சயம்.! பட்டய கிளப்பப்போகும் அமேசான் பெஸ்டிவெல்.!

Great Indian Festival

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவெல் என்பது இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாகும். இந்த நாளில் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக் கேஜெட்டுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள், வீட்டு அலங்கார பொருள்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த பல தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் சலுகைகளுடன் வாங்கிக்கொள்ளலாம்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான கிரேட் இந்தியன் பெஸ்டிவெல் ஆனது அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்காக ஒரு நாள் முன்னதாக அதாவது, அக்-7ம் தேதியே தொடங்கவுள்ளது. இது ஒரு வாரம் வரை அதாவது அக்-15ம் தேதி வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கிய சலுகையாக வாங்குபவர்களுக்கு முதல் ஆர்டரில் இலவச டெலிவரி உள்ளது அதோடு நீங்கள் பொருளை வாங்கிய பிறகு பணத்தை செலுத்திக் கொள்ள பே ஆன் டெலிவரி வசதியும் உள்ளது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ‘பாக்கெட் ஃப்ரண்ட்லி ஸ்டோர்’ ஒன்று உள்ளது அதில் 99 ரூபாய் முதல் 499 ரூபாய் வரையிலான பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

ஃபேஷன் மற்றும் பியூட்டி பொருட்கள் ரூ.199 என்ற ஆரம்ப விலையில் தொடங்குகிறது. சமையல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விலை ரூ.49-ல் இருந்து தொடங்குகிறது. அதோடு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ் விலை ரூ.99-ல் இருந்து தொடங்குகிறது. ஸ்மார்ட் போன்கள் விலை ரூ.5,999-ல் இருந்துத் தொடங்குகிறது.

டிவி மற்றும் வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. அமேசான் அலெக்சா மற்றும் பயர் டிவி மற்றும் கிண்டல் வாங்க விருப்பமுள்ள நபர்களுக்காகவே அவற்றின் விலையானது ரூ.1,799 இல் இருந்து தொடங்குகிறது. மருந்து பொருட்களுக்கு 35 சதவீதம் வரை தள்ளுபடியும் உள்ளது

இவற்றையெல்லாம் வாங்கும் பொழுது அமேசான் பே கிப்ட் கார்டுகளை பயன்படுத்தினால் 10% வரையிலான சேவிங்கை பெறலாம். அதோடு நோ காஸ்ட் இஎம்ஐ வசதி மூலம் ரூ.50 ஆயிரம் வரையிலான சேவிங்கை பெறலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலமாக ரூ.60 ஆயிரம் வரையிலான பணத்தை மிச்சப்படுத்தலாம். மேலும், எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்