சாம்சங் போன் பயனர்களே கவனம்.! இந்திய அரசு எச்சரிக்கை.!

samsung galaxy

சாம்சங் (Samsung Galaxy) ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, சாம்சங் பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), பழைய மற்றும் புதிய மாடல் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக்காட்டி, டிசம்பர் 13ம் தேதி பாதுகாப்பு எச்சரிக்கைக்கான அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பின்படி, “பல மாடல் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் எண்ணற்ற பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த தாக்குதல்களினால் ஹேக்கர்கள் உங்களது மொபைல் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அம்சங்களை மீறி, முக்கியமான தகவல்களை அணுகவும், உங்களது ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தவும் முடிகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சந்தேகம் வரலாம். அனைத்து சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களும் பாதிக்கப்படுமா என்று. அதனையும் அவசரநிலைப் பதிலளிப்புக் குழு தெளிவு படுத்தியுள்ளது. உங்களது சாம்சங் மொபைலில் இருக்கக்கூடிய ஆன்ட்ராய்டு ஓஎஸ் 11 , 12, 13 மற்றும் 14 ஆகிய வெர்சன்களில் இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கூறியுள்ளது.

ஸ்மார்ட்போன்களில் இத்தகைய தாக்குதல்கள் நடந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பார்க்கலாம்.

  • முதலில் உங்கள் ஸ்மார்ட்போனின் பாஸ்வர்ட், பின் நம்பர்கள் உள்ளிட்ட ரகசிய குறியீடுகள் திருடப்படும்.
  • உங்களது தனிப்பட்ட AR இமோஜி பைல்களைப் பார்க்க முடியும்.
  • மொபைலின் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த பைல்களையும் பார்க்க முடியும்.
  • முக்கியமான தகவல்களைத் திருட முடியும்.
  • முழு மொபைலைக் கட்டுப்படுத்த முடியும்.

பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்.?

  • சாம்சங் பயனர்கள் தங்கள் போன்களின் ஓஎஸ் (OS) மற்றும் ஃபார்ம்வேரை (firmware) உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்.
  • இதனை செய்ய உங்கள் மொபைல் செட்டிங்ஸிற்குள் செல்லவும்.
  • அங்கே சாப்ட்வேர் அப்டேட் என்பதற்குள் செல்லவும்.
  • அதில் இன்ஸ்டால் அண்ட் அப்டேட் என்பதை கிளிக் செய்யவும்.
  • இதன்பிறகு புதிய அப்டேட் ஏதேனும் இருந்தால், அது டவுன்லோட் செய்யப்பட்டு உங்கள் மொபைல் ரீஸ்டார்ட் ஆகும்.

இவ்வாறு நீங்கள் அப்டேட் செய்யவில்லை என்றால் ஹேக்கர்கள் உங்களது போன்களைக் கட்டுப்படுத்தி, முக்கியமான தகவல்களை திருடலாம். எனவே உடனே உங்கள் ஸ்மார்ட்போனை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்