சாட் ஜிபிடியை மிஞ்சிய ஜெமினி AI.! சோதனைகளை வென்று சாதனை.!

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதுமையான படைப்பை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, கூகுளின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் உருவாக்கிய ஜெமினி (Gemini) எனப்படும் புதிய ஏஐ அறிமுகமாகியுள்ளது. இந்த ஏஐ மனிதனைப் போலவே சிந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் உரை, படங்கள், ஆடியோ போன்றவற்றை அடையாளம் கண்டு தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். ஜெமினி 1.0 மூலம் பைத்தன், ஜாவா, சி++ போன்ற கோடிங் மொழிகளைப் புரிந்துகொள்ளவும், விளக்கவும் மற்றும் உருவாக்கவும் முடியும்.
கூகுளின் ஜெமினி எஐ ஆனது ப்ரோ, அல்ட்ரா மற்றும் ஜெமினி நானோ என மூன்று வெவ்வேறு வகைகளில் உள்ளது. தற்போது, கூகுள் புதிய ஜெமினி ப்ரோவை அதன் ஜெனெரேட்டிவ் ஏஐ சாட்போட்டான பார்டுடன் ஒருங்கிணைத்துள்ளது. இந்த பார்டு மற்றொரு சக்திவாய்ந்த முன்னணி ஏஐ சாட்போட்டான சாட் ஜிபிடிக்கு நேரடி போட்டியாளராக உள்ளது.
மனிதனை விட சிறப்பாக சிந்திக்கும் AI.! கூகுள் வெளியிட்ட அட்டகாச அப்டேட்.!
இப்போது ஜெமினி ஏஐ ப்ரோவும் பார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இது ஓபன்ஏஐ நிறுவனத்தின் பெரிய மல்டிமாடல் மொழி மாதிரியான ஜிபிடி-4 (ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்ன்ட் டிரான்ஸ்ஃபார்மர் 4) விட அதிக செயல்திறன் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை பல பெஞ்ச்மார்க் சோதனைகளை செய்து ஜிபிடி-4-ஐ விட சிறந்தது என்று கூகுள் கூறுகிறது.
இந்த பெரிய மொழி மாதிரியின் (LLM) மல்டிமாடல் திறன்களை சோதிக்க படம், வீடியோ மற்றும் ஆடியோ என 32 அகாடெமிக் பெஞ்ச்மார்க் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 30 சோதனைகளில் ஜெமினியானது, ஜிபிடி-4 ஐ விட அதிக செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
அதேபோல கணிதம், இயற்பியல், வரலாறு, சட்டம், மருத்துவம் போன்ற 57 சோதனைகளைக் கொண்ட MMLU (மாசிவ் மல்டிடாஸ்க் லாங்குவேஜ் அண்டர்ஸ்டாண்டிங்) பெஞ்ச்மார்க்கில் 90.0% மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இதனால் ஜெமினி அல்ட்ரா மனித நிபுணர்களை விஞ்சும் முதல் ஏஐ மாடல் எனக் கூறப்படுகிறது.
மேலும், ஜெமினி அல்ட்ரா புதிய MMMU பெஞ்ச்மார்க்கில் (மாசிவ் மல்டி டிசிப்ளின் மல்டிமோடல் அண்டர்ஸ்டாண்டிங் மற்றும் ரீசனிங் பெஞ்ச்மார்க்) 59.4% என்ற மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. இந்த சோதனைகளை வைத்து ஜெமினி ஏஐ, சாட் ஜிபிடியை விட சிறந்தது என்று கூகுள் கூறியுள்ளது. இதற்கிடையில், ஜெமினி அல்ட்ரா ஆனது 2024ம் ஆண்டு தொடக்கத்தில, பார்ட்டில் உட்புகுத்தி பார்டு அட்வான்ஸ் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025