இன்று முதல் செயல்படாத கணக்குகளை நீக்கத் தொடங்கும் கூகுள்.!

InactiveGoogleAccount

கடந்த மே மாதம் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது இன் ஆக்டிவ் அக்கௌன்ட் பாலிசி (inactive account policies) புதுப்பித்தது. அந்த பாலிசியின் கீழ், குறைந்தது இரண்டு ஆண்டுகள் செயலில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ளதாக அறிவித்தது. இவ்வாறு கணக்குகள் நீக்கப்படும் போது, அந்த கணக்கில் இருக்கும் தகவலும் அழிந்துவிடும்.

கூகுளின் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்த நாம் கூகுள் கணக்குகளைப் (Google Account) பயன்படுத்துகிறோம். சில நேரம் நாம் உருவாக்கிய அந்த கணக்கில் பாஸ்வர்டை மறந்து, மீண்டும் புதிதாக ஒரு கணக்கை உருவாக்கி பயன்படுத்துகிறோம். பழைய கணக்கை அப்படியே விட்டு விடுகிறோம்.

ரெட்மி 13சி 5ஜி போனின் பிராஸசர் இதுதான்.? வெளியீட்டிற்கு முன்பே அறிவித்த நிறுவனம்,!

ஒரு கணக்கு நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அந்த கணக்கு ஸ்பேம் போன்ற தேவையற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தப்படலாம். இந்த அபாயத்தைக் குறைக்க கூகுள் தனது இன் ஆக்டிவ் அக்கௌன்ட் பாலிசியை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் புதுப்பித்தது.

அதில் குறைந்தது 2 ஆண்டுகளாக கூகுள் கணக்கை பயன்படுத்தாமலோ அல்லது கூகுள் பயன்பாடுகளில் உள்நுழையாமலோ இருந்தால் கணக்கு நீக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. இந்த நடவடிக்கை டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதோடு ஒரு கணக்கை நீக்கும் முன், அந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் ரெகவர் செய்ய கொடுத்திருக்கும் மின்னஞ்சல் ஆகிய இரண்டிற்கும் பல அறிவிப்புகள் அனுப்பப்படும் என்றும் இதனை புறக்கணிக்கும் கணக்குகள் நீக்கப்படும் என்றும்  தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று முதல் கூகுள் செயலில் இல்லாதா கணக்குகளை நீக்கவுள்ளது.

கணக்கைப் பாதுகாப்பது எப்படி.?

இந்த நடவடிக்கையில் இருந்து உங்கள் கணக்கைப் பாதுகாக்க குறைந்தது 2 வருடங்களுக்கு ஒருமுறை அந்த கூகுள் கணக்கில் உள்நுளைய வேண்டும். அதாவது உங்கள் கணக்கைப் பயன்படுத்தி மின்னஞ்சலைப் படித்தல் அல்லது அனுப்புதல், யூடியூப் மற்றும் கூகுள் சர்ச் போன்றவற்றைப் பயன்படுத்துதல், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஆப்ஸ்களைப் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இந்த ஒரு AI போதும்.? ஒரே போட்டோவில் எளிதில் கிராஃபிக்ஸ் செய்யலாம்.!

எந்த கணக்குகள் பாதிக்கப்படும்.?

இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்படாத தனிப்பட்ட கூகுள் கணக்குகள் மட்டுமே பாதிக்கப்படும். பள்ளிகள் அல்லது நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட கணக்குகள் பாதிக்கப்படாது. உங்கள் கூகுள் கணக்கு செயலில் உள்ளதா என்பதைக் கண்டறிய, தங்களின் ஒவ்வொரு பயன்பாட்டையும் கூகுள் தீர ஆய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்