செயலில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்.! எவ்வாறு பாதுகாப்பது.?

OldGoogleAccount

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகள் இருக்கிறதா.? அதனை பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களா.? இப்போது அதனை பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. ஏனெனில் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் செயலில் இல்லாத கணக்குகளை நீக்க உள்ளது. இதனால் அந்த கணக்கில் இருக்கும் தகவலும் அழியும்.

நாம் அனைவரும் கூகுளின் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். இதனை அணுகுவதற்கு கூகுள் கணக்கு (Google Account – Gmail Account) என்பது கண்டிப்பாகத் தேவைப்படும். இதற்கு ஒவ்வொருவரும் தனக்கென ஒரு கூகுள் கணக்கை உருவாக்கி இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை உருவாக்கி, அதில் சில கணக்குகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் பல கணக்குகள் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுவிடுகிறது. இந்நிலையில் கூகுள், கடந்த மே மாதம் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத அல்லது உள்நுழையாமல் இருக்கும் கணக்குகளை நீக்குவதாக அறிவித்தது.

5,400mAh பேட்டரி..100W வயர்டு, 50W வயர்லெஸ் சார்ஜிங்.! ரியல்மீ ஜிடி 5 ப்ரோவின் விலை இதுதான்.?

அதன்படி, பயனரின் தகவலைப் பாதுகாப்பதற்கும், செயலாற்ற கணக்குகளை எவரேனும் தவறாக பயன்படுத்தி விடக் கூடாது என்கிற காரணங்களைக் கருத்தில் கொண்டு, இரண்டு வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை க்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த தகவலின்படி, டிசம்பர் 1ம் தேதி முதல் செயலில் இல்லாத கூகுள் கணக்குகள் நீக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கையில் தனிப்பட்ட கூகுள் கணக்குகள் மட்டுமே நீக்கப்படும். ஒரு நிறுவனத்தின் கணக்கு அல்லது நிறுவனத்தின் மூலம் உங்களுக்காக உருவாக்கப்பட்ட எந்த கூகுள் கணக்கும் நீக்கம் செய்யப்படாது.

உங்கள் கூகுள் கணக்கு நீக்கப்படமால் இருக்க, குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும். ஏனெனில் உங்கள் கூகுள் கணக்கு செயலில் உள்ளதா என்பதைக் கண்டறிய, தங்களின் ஒவ்வொரு பயன்பாட்டையும் தீர ஆய்வு செய்கிறது.

உலகளவில் களமிறங்கும் ஒன்பிளஸ் 12.! எப்போ தெரியுமா.?

எனவே கூகுள் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் சர்ச் போன்றவற்றில் அவ்வப்போது லாகின் செய்ய வேண்டும், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஆப்ஸ்களைப் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும், செயலில் இல்லாத கணக்குகள் நீக்கப்படுவதற்கு முன்னர் பயனர்களுக்கு உங்கள் கணக்கிற்கு கூகுளிலிருந்து பல அறிவிப்புகள் அனுப்பப்படும்.

அதோடு நீங்கள் பாஸ்வர்ட்டை மறந்து விட்டால் ரெகவர் செய்ய கொடுத்திருக்கும் ஜிமெயில் கணக்கிற்கும் அறிவிப்புகள் அனுப்பப்படும். இதனை பொருட்படுத்தாமல் இருக்கும் பயன்படுத்தப்படாத ஜிமெயில் கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்