Nowruz 2024: ஈரானியப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

nowruz -2024

Nowruz 2024: நவ்ரூஸ், ஈரானிய புத்தாண்டு தினமான இன்று (மார்ச் 19) சிறப்பு டூடுலை வெளியிட்டு கொண்டாடுகிறது கூகுள். நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு தினமாகும் ஆகும், அதாவது நவுரூஸ் என்ற சொல்லுக்கு “புது நாள்” என்று அர்த்தமாகும். இந்த புத்தாண்டு தனத்தை கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

nowruz -2024
nowruz -2024 [image -google]
நவ்ரூஸுக்கு பின்னல் பெரிய வரலாறை இருக்கிறது, இது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அதாவது பனிப்பொழிவை வழக்கமாக சந்தித்து வரும் நாடுளுக்கு சம்மர் சீசன் (வெயில் காலம்) தொடங்குவதை கொண்டாடப்படும் ஒரு பண்டைய கால ஈரானிய பண்டிகையாகும்.

READ MORE – இதுவரை இல்லாத மிகப்பெரிய டிஸ்ப்ளே… கூகுள் பிக்சல் ஃபோல்ட் 2 குறித்த சுவாரஸ்யங்கள்..

உலகம் முழுவதும் இந்த புத்தாண்டை 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்று சொல்லப்படுகிறது. இதனை ஈரான் நாடு மட்டும் இல்ல, இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், ஈராக், கிர்கிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், துருக்கி, துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பட்டுப் பாதை அதாவது (caravan வண்டி) ஒட்டிய நாடுகளில் இந்த விழா பொதுவாகக் கொண்டாடப்படுகிறது.

READ MORE – இனி டெக்ஸ்ட் to வீடியோ… விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது Sora AI!

வழக்கமாக உலக முழுவதும் உள்ள முக்கால் வாசி நடுகளில் ஜனவரி 1ம் தேதி தான் புத்தாண்டு தினம் கொண்டாடப்படும். ஆனால், அதில் ஒரு சில நாடுகளில் அந்நாட்டிற்கு ஏற்றார் போல் மாற்று தேதிகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாரசீக புத்தாண்டைக் குறிக்கும் ‘சர்வதேச நவ்ரூஸ் தினம் 2024’ இன்று கொண்டப்படுகிறது. இந்த சிறப்பு இனத்தை முன்னிட்டு, கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

READ MORE – புது புது அப்டேட்டுகளை அள்ளி வீசும் வாட்ஸ் அப்… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்!

அந்த டூடுலில், மலர் வடிவங்கள், பாரம்பரிய கையெழுத்து மற்றும் நவ்ரூஸ் டேபிள் (Haft-sin table) போன்ற பொருட்கள் உட்பட பாரசீக கலாச்சாரத்தின் கூறுகளை கொண்டு காட்சிப் படுதத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கூகுள் தனது செய்தி குறிப்பில், இந்த நாளில் உண்ணப்படும் உணவுகளை வர்ணித்து, அதிர்ஷ்டத்திற்கான கோதுமை, வலிமைக்கான கோதுமை புட்டு, காதலுக்கு ஆலிவ் ஆயில், சூரிய உதயத்திற்கான பெர்ரி, பொறுமைக்கான வினிகர், அழகுக்கான ஆப்பிள் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கான பூண்டு ஆகியவை அடங்கும் என குறிப்பிட்டு இனிய நவ்ரூஸ் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்