Womens Day 2024: மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!
Womens Day 2024: 2024 ஆம் ஆண்டு இன்று (மார்ச் 8ம் தேதி) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மனதைக் கவரும் விளக்கத்துடன் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அந்நாளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
READ MORE – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்!
முக்கியமான நாட்களில் அல்லது சிறப்புக்குரிய நபர்களின் நினைவை குறிக்கும் வகையில், கூகுள் அடிக்கடி டூடுல்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில், இன்று சர்வதேச மகளிர் தினம் என்பதால், அதற்கான சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அந்த டூடுலில் இரண்டு சிறுமிகள் தங்கள் பாட்டியுடன் அமர்ந்து கதை கேட்பது போல் சித்தரிக்கிறது. இந்த ஆண்டு கூகுளின் டூடுல் கலைஞர் சோஃபி டியாவோவால் உருவாக்கப்பட்டது.
READ MORE – ஒரு மணிநேரம் தான் முடக்கம்… பல்லாயிரம் கோடிகளை இழந்த மெட்டா நிறுவனம்!
இந்த டூடுல் சர்வதேச மகளிர் தினம் மற்றும் பாலின சமத்துவத்தை நோக்கிய அனைத்து முன்னேற்றங்களையும் கொண்டாடுகிறது. முதல் முறையாக, 1975 ஆம் ஆண்டு இந்த நாளில், ஐக்கிய நாடுகள் சபை முதலில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது. அப்போதிலிருந்து மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
READ MORE – “மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்”.. மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்!
இது குறித்து கூகுள் தனது செய்தி குறிப்பில், “இன்று, மக்கள் சமூகத்தை மாற்றியமைத்த பெண்களைக் கொண்டாடுகிறார்கள், சமத்துவத்திற்காகப் போராடுகிறார்கள், எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு நேர்மறையான முன்மாதிரிகளை வைத்திருக்கிறார்கள். பல ஆண்டுகளாக பெண்கள் அடைந்த முன்னேற்றம் அவர்களுக்கு முன் இருந்தவர்களின் துணிச்சலான செயல்கள் இல்லாமல் சாத்தியமில்லை என்று சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.