Play Movies-க்கு குட்பை சொன்ன கூகுள்.! அதிர்ச்சியில் பயனர்கள்.!

Google Play Movies

நமக்கு பொழுதுபோகவில்லை என்றால் படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அதிலும் படங்களை டிவியில் பார்ப்பதை விட நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் படம் பார்ப்பதற்காக உள்ள பயன்பாடுகளில் தான் அதிகமாகப் பார்க்கிறோம். அத்தகைய பயன்பாடுகளில் ஒன்றுதான் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ப்ளே மூவீஸ் அண்ட் டிவி.

இதில் நமக்கு வேண்டிய திரைப்படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் வாடகைக்கு எடுத்தும் பார்க்கலாம். சொந்தமாக வாங்கியும் கூட வாங்கலாம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் வாஙகி வைத்திருக்கும் எந்தவோரு படத்தையும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இப்போது கூகுள் நிறுவனம் கூகுள் ப்ளே மூவீஸ் அண்ட் டிவி பயன்பாட்டை நிறுத்தி, அதனை அனைத்து சேவைகளில் இருந்தும் நீக்க உள்ளது. இதில் முதல் கட்டமாக ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் ப்ளே மூவீஸ் பயன்பாடுகளை நீக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கூகுள் பிளே இணையதளத்திலும், ஆன்ட்ராய்டு டிவியிலும் நீக்க உள்ளது.

இந்த நடவடிக்கையானது அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி முடிவடையும். அப்போது எந்தொரு சாதனத்தில் கூகுள் ப்ளே மூவீஸ் பயன்பாடு இருக்காது. இதனால் பல பயனர்கள் அதிர்ச்சிக்குள்ளாகலாம். ஏனெனில் தாங்கள் வாஙகி வைத்துள்ள படங்கள் அனைத்தும் போய்விடுமோ என்று நினைக்கத் தொடங்குவார்கள். ஆனால் அதற்கும் கூகுள் சில வசதிகளைக் கொடுத்துள்ளது. இப்போது அவற்றை காணலாம்.

நீங்கள் வாங்கியப் படத்தை எவ்வாறு பார்ப்பது.?

  • ஜனவரி 17ம் தேதி முதல் ஆண்ட்ராய்டு டிவியில் முன்பு வாங்கிய திரைப்படங்களை பார்ப்பதற்கும் அல்லது ஆண்ட்ராய்டு டிவியில் புதிய திரைப்படங்களை வாங்குவதற்கும் வாடகைக்கு எடுப்பதற்கும் ஷாப் டேப் (Shop Tab) கொடுக்கப்பட்டிருக்கும். அங்கு இருக்கக்கூடிய லைப்ரரியில் பழைய படங்கள் இருக்கும்.
  • ஆண்ட்ராய்டு டிவி மூலம் இயங்கும் கேபிள் பாக்ஸ்கள் அல்லது செட்-டாப் பாக்ஸ்களில், இருக்கக்கூடிய யூடியூப் பயன்பாட்டில் நீங்கள் வாங்கிய திரைப்படங்களைப் பார்க்க முடியும்.
  • அதேபோல, வெப் பிரௌசர்களில் உள்ள யூடியூப் இணையதளத்தில் நீங்கள் வாங்கிய திரைப்படங்களைப் பார்க்க முடியும்.

கூகுள் தனது பொழுதுபோக்கு சேவைகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு நோக்கத்துடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்