Google Pixel 8a: புதிய அறிமுகத்திற்கு தயாராகும் கூகுள்.! இதுதான் அடுத்த மாடலா.?

Google Pixel 8a

கடந்த அக்டோபர் 4ம் தேதி கூகுள் தனது புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. அதன்படி, கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் ஆனது.

அதைத்தொடர்ந்து, 8 சீரிஸில் புதிய கூகுள் பிக்சல் 8ஏ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இது கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் மற்றொரு மாடலாக இருக்கலாம். ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே மற்றும் கேமரா அம்சங்கள் என சிலவற்றைத் தவிர மற்ற அம்சங்கள் அனைத்தும் ஒன்றாகவே உள்ளன.

டிஸ்பிளே

கூகுள் பிக்சல் 8ஏ ஆனது 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடைய 6.1 இன்ச் அளவுள்ள ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம். இது பிக்சல் 8-ஐ விட .1 இன்ச் சிறியதாக இருக்கும். இந்த டிஸ்பிளே 1,600 நிட்ஸ் முதல் 1,800 வரையிலான பிரைட்னெஸ்ஸை கொண்டிருக்கலாம்.

கூகுள் பிக்சல் 8 இல் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் ஐபி68 ரேட்டிங் இருக்கிறது. இதுவும் பிக்சல் 8ஏ வில் வரலாம். முக்கியமாக ஆல்வேஸ் ஆன் அம்சம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

பிராசஸர்:

பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது மாலி-ஜி715 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட கூகுள் டென்சர் ஜி3 எஸ்ஒசி பிராசஸர் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 8 ஆனது ஆன்ட்ராய்டு 14 ஓஎஸ் மூலம் இயக்கப்படுவதால், இந்த பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனிலும் ஆன்ட்ராய்டு 14 ஓஎஸ் இருக்கலாம். கூடுதலாக, பிக்சல் 8 இன் பிராசஸர் ஆனது டைட்டன் எம்2 என்கிற பாதுகாப்பு சிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவும் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம்.

கேமரா: 

இதன் கேமரா அமைப்பைப் பொறுத்தவரையில் பின்புறம் 12.2 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 12 எம்பி அல்ட்ரா வைட் கேமரா பொருத்தப்பட்ட டபுள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம். பிக்சல் 8 ஆனது 50 எம்பி மெயின் கேமராவைக் கொண்டுள்ளது. எனவே பிக்சல் 8ஏ அறிமுகத்தின் போது கேமராவில் மாற்றம் இருக்கலாம். முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ கால் செய்யவதற்கு 10.1 எம்பி கேமரா பொறுத்தப்படலாம். டிஜிட்டல் ஜூம், ஆட்டோ ஃபிளாஷ், ஃபேஸ் ஃபேஸ்டெக்ஷன் போன்ற கேமரா அம்சங்கள் இருக்கலாம்.

பேட்டரி:

கூகுள் பிக்சல் 8ஏ வில் 4,700 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படலாம். இதனை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பிக்சல் 8-ல் இருக்கும் பேட்டரி ஷேர் அம்சம் இதில் சேர்க்கப்பட்டால் மற்ற மொபைல் போனைக் கூட சார்ஜ் செய்யலாம். பிக்சல் 8-ல் க்யூஐ-சான்றளிக்கப்பட்ட 18 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஸ்டோரேஜ்

பிக்சல் 8ஏ ஆனது 8 ஜிபி ரேமைக் கொண்டிருக்கலாம். இன்டெர்னல் ஸ்டோரேஜ் குறித்த விவரங்கள் இல்லை. கிரீம் மற்றும் ப்ளூ நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கலாம். பிக்சல் 8 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்