Google Pixel 8 Series: ரூ.5,000 வரை தள்ளுபடி.! முதல் விற்பனைக்கு களமிறங்கிய கூகுள் பிக்சல் 8 சீரிஸ்.!

Google Pixel 8 Series

கூகுள் நிறுவனம் தனது தயாரிப்பான கூகுள் பிக்சல் 8 சீரிஸை கடந்த அக்டோபர் 4ம் தேதி Made by Google Hardware வெளியீட்டு நிகழ்வில் இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. இதில் கூகுள் 8 கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது.

இதனுடன் பிக்சல் வாட்ச் 2 மற்றும் பிக்சல் பட்ஸ் ப்ரோவும் வெளியிடப்பட்டது. தற்போது கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று (அக்டோபர் 12) விற்பனைக்கு வந்துள்ளது.

அதன்படி, கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனில் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.75,999 என்ற விலையிலும், 256 ஜிபி வேரியண்ட் ரூ.82,999 என்ற விலையிலும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. பிக்சல் 8 ப்ரோவில் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.1,06,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

சலுகை

இந்த கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும் ஆன்லைன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வழியாக வாங்கிக்கொள்ளலாம். இதில் ஆக்சிஸ், ஐசிஐசிஐ, கோடக் மற்றும் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, பிக்சல் 8 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.5,000 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இதுதவிர, பழைய போனை எக்ஸ்சேஞ்ஜ் செய்தால் ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். இதில் 3 முதல் 6 மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ வசதி உள்ளது.

பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனை ஆக்சிஸ், ஐசிஐசிஐ, கோடக் மற்றும் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.3,000 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இதுதவிர, பழைய போனை எக்ஸ்சேஞ்ஜ் செய்தால் ரூ.4,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.

இதில் 6 மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ வசதி உள்ளது. பிக்சல் 8 சீரிஸில் உள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பிக்சல் வாட்ச் 2-ஐ ரூ.19,999 என்ற தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளலாம். பிளிப்கார்ட்டில் 7 நாட்களுக்கான ரீபிளேஸ்மென்ட் பாலிஸியும் உள்ளது.

கூகுள் பிக்சல் 8 & 8 ப்ரோ விவரக்குறிப்புகள்

கூகுள் பிக்சல் 8-ல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடைய 6.2 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. இது 2,000 நிட்ஸ் பிரைட்னெஸ், பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் ஐபி68 ரேட்டிங் மற்றும் ஆல்வேஸ் ஆன் அம்சம் உள்ளது. கூகுள் பிக்சல் 8 ப்ரோ-ல் 1344 x 2992 ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் டிஸ்பிளே உள்ளது. இது 2,400 நிட்ஸ் பிரைட்னெஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

கூகுள் பிக்சல் 8 மற்றும் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் டைட்டன் எம்2 பாதுகாப்பு சிப்புடன் இணைக்கப்பட்ட கூகுள் டென்சர் ஜி3 சிப்செட் பொறுத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 14 மூலம் ஓஎஸ் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் தரப்படும். பிக்சல் 8-ல் பின்புறம் 50 எம்பி வைட் அங்கிள் மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ராவைடு கேமரா என டபுள் ரியர் கேமரா மற்றும் முன்புறம் செல்ஃபிக்காக 10.5 எம்பி கேமரா உள்ளது.

பிக்சல் 8 ப்ரோ-ல் 50எம்பி வைட் ஆங்கிள் கேமரா, 48எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 48எம்பி டெலிஃபோட்டோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் முன்புறம் செல்ஃபிக்காக 10.5 எம்பி கேமரா உள்ளது. பிக்சல் 8 மாடலில் 4,575 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் செய்ய 27 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் க்யூஐ-சான்றளிக்கப்பட்ட 18 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

8 ப்ரோ மாடலில் 5,050 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சீக்கிரமாக சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அப்சிடியன், ஹேசல் மற்றும் ரோஸ் என மூன்று வண்ணங்களில் வெளியான பிக்சல் 8 ஆனது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

அப்சிடியன் மற்றும் பே என இரண்டு வண்ணங்களில் வெளியான 8 ப்ரோ ஆனது 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் என 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்