மலிவான விலையில் Google Pixel 7A.! எப்போது? என்ன சிறப்பு தெரியுமா?

Google Pixel 7a

கூகுள் நிறுவனத்தின் ‘பிக்சல் 7A Google Pixel 7A 5G’ மொபைல் வரும் 11ம் தேதி வெளியாக உள்ளது. 

கூகுள் இந்தியா தனது அடுத்த பிக்சல் போனை இந்தியாவில் வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது. இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7A (Google Pixel 7A 5G) மொபைல் வரும் 11ம் தேதி வெளியாக உள்ளது. இதன் விலை ரூ.40,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் இந்தியா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில், இதன் பெயரை வெளியிடவில்லை என்றாலும், பெரும்பாலும் வரவிருக்கும் பிக்சல் ஃபோன் கூகிள் பிக்சல் 7a ஆக இருக்கும் என வாடிக்கையாளர்கள் கணித்துள்ளனர்.

Google Pixel 7a-ல் என்ன சிறப்பம்சம்:

கூகுள் பிக்சல் 7ஏ பிக்சல் 7 சீரிஸின் மலிவான விலையில் கிடைக்கும். இது பிக்சல் 7ஐ விட டோன்ட் டவுன் அம்சங்களுடன் வர வாய்ப்புள்ளது. மேலும், இந்த போன் கூகுள் டென்சர் ஜி2 செயலி மூலம் இயங்கும் என்றும், ஆண்ட்ராய்டு 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஸ்மார்ட்போன் 12MP அல்ட்ரா-வைட் சென்சார் உடன் இணைக்கப்பட்ட 64MP முதன்மை கேமராவுடன், 10.8MP செல்ஃபி கேமரா இருக்கலாம்.
  • 90Hz OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 4.400mAh பேட்டரியைக் கொண்டிருக்கும், 20w ஜார்ஜிங்.
  • UFS 3.1 உடன் 8GB LPDDR5 ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கிடைக்கும்.

தற்போதைக்கு இந்த போன் குறித்து இந்த தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது, விரைவில் முழு விவரம் வெளியாகும். இது சொல்லப்பனால் Pixel 6a போலவே இருக்கிறது. முந்தைய Pixel 6a இப்போது Flipkart-ல் ரூ.27,999 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பிக்சல் ஃபோல்ட் மற்றும் பிக்சல் டேப்லெட் உள்ளிட்ட பல தயாரிப்புகளுடன் கூகுள் I/O இல் இந்த போன் உலகளவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்