கூகுள் பே இனிமேல் இயங்காது ..? இது தான் காரணமா ..!

மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றி வருகிற தொழில்நுட்ப ஆப்பிள் கூகுள் பேயும் (Google Pay) ஒன்று. நாம் எங்கு சென்றாலும் கையில் இருக்க கூடிய போனில் ஒரு ஆப்பை வைத்து பணம் செலுத்தும் முறையை மிகவும் எளிமை படுத்தியதற்கு மிகப்பெரிய பங்கானது கூகுள் பே ஆப்பிற்கு உண்டு. அந்த கூகுள் பே ஆப்பை இந்த ஆண்டில் வருகிற ஜூன் மாதம் 4-ம் தேதியோடு அமெரிக்காவில் நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அவர்களது வலைப்பதிவில் கடந்த வியாழன் அன்று தெரிவித்துள்ளனர்.

Read More : – இனி TrueCaller தேவையில்லை… நம்பர் மட்டும் போதும்.! TRAIயின் புதிய உத்தரவு.!

இருப்பினும், இந்த நடவடிக்கையால் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் கூகுள் பேவின் கோடிக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம், கூகுள் பேவின் சேவையை எந்த வித தடையுமின்றி தொடரும் எனவும் அறிவித்துள்ளது.

தற்போது, கூகுள் பேவை கூகுள் வாலட்டாக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், கூகுள் வாலட்டை 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கூகுள் வாலட்டை கிரெடிட் கார்ட், டெபிட் கார்டு, போக்குவரத்து பாஸ்கள், ஐடி-கார்டுகள், ஓட்டுநர் உரிமங்கள் என பலவற்றையும் சேமிக்க முடியும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

Read More : – சர்ச்சை படங்களை உருவாக்கிய ஜெமினி AI சாட்பாட் ..!  தற்காலிகமாக நிறுத்தியது கூகுள் நிறுவனம் ..!

ஜூன் 4 பிறகு அமெரிக்காவில் இந்த கூகுள் பே ஆப் நிறுத்தப்பட்டு கூகுள் வாலட் ஆப் நடைமுறைக்கு வந்துவிடும். மேலும், கூகுள் பேவில் உள்ள பயனர்கள், கூகுள் பே இணையதளத்தைப் பயன்படுத்தி ஜூன் 4 க்கு பிறகும் தங்கள் கூகுள் பே கணக்கில் உள்ள பணத்தை தங்களது வங்கிக் கணக்குகளுக்கு மாற்ற முடியும் எனவும் கூகுள் நிறுவனம் அவர்களது வலைப்பதிவில்(Blog) தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்