தற்போதுள்ள தொழிநுட்ப உலகில் நமக்குத் தேவையான அனைத்தையும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே வாங்கி விடுகிறோம். அவ்வாறு வாங்கும் பொருளுக்கு கூகுள் பே, போன் பே போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணத்தை செலுத்தி விடுகிறோம். இந்த செயலி மூலம் பேங்க்கிற்கு நேரடியாக செல்லாமல், பேங்கில் இருக்கும் பணத்தை தங்களது தேவைக்காகப் பயன்படுத்துகின்றனர்.
கூகுள் பேயில், பயனர்கள் க்யூஆர் ஸ்கேன், மொபைல் நம்பர், யுபிஐ ஐடி மூலமாகவும் பணப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இதில் 60 மில்லியனுக்கும் அதிகமானோர் கூகுள் பேவைப் பயன்படுத்துகின்றனர். இதனால் கூகுள் பே இந்தியாவில் இரண்டாவது பிரபலமான பணப்பரிவர்த்தனை பயன்பாடாக உள்ளது.
இதுவரை கூகுள் பே இந்த அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் எந்தவிதமான கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. அதன்படி, இந்த செயலி மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனம் நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டியிருந்தது. அதாவது ஒரு ரீசார்ஜ்க்கு ரூ.239 கட்டணம் என்றால் அதை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் இப்போது மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு நீங்கள் சில கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் கடந்த சில நாட்களாக மொபைல் ரீசார்ஜ் செய்யும்போது கூகுள் பே கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக செய்திகள் பரவி வருகிறது. கூகுள் பே மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில் இத்தகைய கட்டணங்களை வசூலிப்பது தொடர்பான பல ஸ்கிரீன் ஷாட்களும் வெளியாகியுள்ளன.
அந்த ஸ்கிரீன் ஷாட்டுகளின் படி, ரீசார்ஜ் செய்வதற்கு கூடுதலாக ரூ.3 வசூலிக்கபடுவது தெரியவந்துள்ளது. 300 ரூபாய்க்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இது தவிர, ரூ.100 முதல் ரூ.200 வரையிலான ரீசார்ஜ் திட்டங்களுக்கு ரூ.1 மற்றும் ரூ.200 முதல் ரூ.300க்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கப்படும்.
கூகுள் பேவில் வந்துள்ள இந்த மாற்றத்தால் பயனர்கள் தங்களது கோபத்தையும், வருத்ததையும் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளதோடு, மாற்று பயன்பாடுகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலாக நீங்கள் உங்கள் டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனத்தின் செயலியை ரீசார்ஜ் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…