இனி இதற்கும் கூடுதல் கட்டணம்.! கூகுள் பே செயலால் வருந்தும் பயனர்கள்.!

Google Pay

தற்போதுள்ள தொழிநுட்ப உலகில் நமக்குத் தேவையான அனைத்தையும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே வாங்கி விடுகிறோம். அவ்வாறு வாங்கும் பொருளுக்கு கூகுள் பே, போன் பே போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணத்தை செலுத்தி விடுகிறோம். இந்த செயலி மூலம் பேங்க்கிற்கு நேரடியாக செல்லாமல், பேங்கில் இருக்கும் பணத்தை தங்களது தேவைக்காகப் பயன்படுத்துகின்றனர்.

கூகுள் பேயில், பயனர்கள் க்யூஆர் ஸ்கேன், மொபைல் நம்பர், யுபிஐ ஐடி மூலமாகவும் பணப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இதில் 60 மில்லியனுக்கும் அதிகமானோர் கூகுள் பேவைப் பயன்படுத்துகின்றனர். இதனால் கூகுள் பே இந்தியாவில் இரண்டாவது பிரபலமான பணப்பரிவர்த்தனை பயன்பாடாக உள்ளது.

5,400mAh பேட்டரி..1 டிபி ஸ்டோரேஜ்.! ஒன்பிளஸ் 12-ன் அறிமுக தேதி இதுதான்..?

இதுவரை கூகுள் பே இந்த அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் எந்தவிதமான கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. அதன்படி, இந்த செயலி மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனம் நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டியிருந்தது. அதாவது ஒரு ரீசார்ஜ்க்கு ரூ.239 கட்டணம் என்றால் அதை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

ஆனால் இப்போது மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு நீங்கள் சில கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் கடந்த சில நாட்களாக மொபைல் ரீசார்ஜ் செய்யும்போது கூகுள் பே கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக செய்திகள் பரவி வருகிறது. கூகுள் பே மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில் இத்தகைய கட்டணங்களை வசூலிப்பது தொடர்பான பல ஸ்கிரீன் ஷாட்களும் வெளியாகியுள்ளன.

இனி புதிய கேம்-ஐ டவுன்லோட் செய்ய தேவையில்லை..! யூடியூப் அசத்தல் வசதி.!

அந்த ஸ்கிரீன் ஷாட்டுகளின் படி, ரீசார்ஜ் செய்வதற்கு கூடுதலாக ரூ.3 வசூலிக்கபடுவது தெரியவந்துள்ளது. 300 ரூபாய்க்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இது தவிர, ரூ.100 முதல் ரூ.200 வரையிலான ரீசார்ஜ் திட்டங்களுக்கு ரூ.1 மற்றும் ரூ.200 முதல் ரூ.300க்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கப்படும்.

கூகுள் பேவில் வந்துள்ள இந்த மாற்றத்தால் பயனர்கள் தங்களது கோபத்தையும், வருத்ததையும் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளதோடு, மாற்று பயன்பாடுகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலாக நீங்கள் உங்கள் டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனத்தின் செயலியை ரீசார்ஜ் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்