அட்ரா சக்க …! அசத்தல் அப்டேட்டுடன் இந்தியர்களை கவரும் கூகுள் மேப்..!

Google Maps

கூகுள் மேப் : இந்தியாவில் சாலை பயணம் மேற்கொள்பவர்கள், உணவை டெலிவரி செய்பவர்கள் குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற டெலிவரி தொடர்பான வேலைகள் சார்ந்துள்ள செயலிகளில் ஒன்று தான் கூகுள் மேப்ஸ்.

நாம் இது வரை சென்றிடாத பகுதிகளில் கூட பயணம் மேற்கொள்ள, ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த கூகுள் மேப் இருந்து வருகிறது. இந்நிலையில், கூகுள் மேப்ஸ் ஆப்பை பல இந்திய பயனர்கள் இதில் முக்கியமான நேரத்தில் பல தவறான வழிகளையும், மேம்பாலத்தின் வழியை தவறுதலாக காட்டுவது என விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், இந்திய பயனர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது மட்டும் அல்லது மேலும் புதிய அப்டேட்களை வழங்கி இருக்கிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது என்னவெல்லாம் என்று தற்போது பார்க்கலாம்.

குறுகலான சாலைகள் :

இந்த அப்டேட்டின் சிறப்பு அம்சம் என்னவென்றால் பயனர்கள் பயணிக்கும் பாதையில் உள்ள சாலைகளின் குறுகலான பகுதிகளைப் பற்றிய தகவல்களை இது வழங்குகிறது. இந்த புதிய அம்சம் இந்திய பயனர்களுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், இந்தூர், போபால், புவனேஸ்வர் மற்றும் கவுகாத்தி ஆகிய எட்டு இடங்களில் இந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வருகிறது.

செயற்கைக்கோள் படங்கள், வீதிக் காட்சி மற்றும் சாலை வகைகள், கட்டிடங்களுக்கு இடையிலான தூரம், நடைபாதை பகுதிகள் போன்ற பிற தகவல்களிலிருந்து தரவை சேகரிக்க AI-ஐ முதல் முறையாக கூகுள் மேப்பில் பயன்படுத்தி உள்ளனர்.

மேம்பால வளைவுகள் :

கூகுள் மேப்ஸில் இருந்த ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது, தற்போது ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது என இந்த அப்டேட் மூலம் பயனர்கள் கருதுகின்றனர். அதன்படி, புதிய அம்சமாக காட்சி விழிப்பூட்டல் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அப்டேட் இந்த வாரம் முதல் 40 இந்திய பெரும் நகரங்களில் கொண்டுவர உள்ளனர்.

இது ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் அதன் பிறகு iOS பயனர்களுக்கும் கிடைக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது. பின்னர் அதே அம்சத்தைப் பெறுவார்கள் என்றும் கூகுள் கூறியது.

மேலும், இந்த அப்டேட்டில் பயனர்கள் மேம்பாலத்தை நெருங்கும்போது அதே பாலத்தில் தொடரலாமா அல்லது சர்வீஸ் சாலைகளை பயன்படுத்தலாமா என்ற பரிந்துரைகளும் இனி கூகுள் மேப்ஸ் வழங்கும் என்று கூறி உள்ளனர்.

மெட்ரோ டிக்கெட் முன்பதிவுகள் :

பயனர்கள் இப்போது கூகுள் மேப்ஸ் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளனர். இந்த அம்சம் அடுத்த வாரம் முதல் சென்னை மற்றும் கொச்சியில் தொடங்கி படிப்படியாக இந்தியா முழுவதும் கிடைக்கும் என கூறி உள்ளனர்.

இத்துடன் EV சார்ஜிங் நிலையங்கள் அதாவது எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்யும் நிலையங்கள் இந்தியா முழுவதும் எங்கு எங்கு உள்ளது என்பது குறித்த தகவல்கள் மற்றும் எந்த ஒரு நெடுஞ்சாலையிலோ அல்லது வேறு எங்கோ விபத்து நடந்தால் உடனடியாக புகார் அளிக்கும் அசத்தல் அம்சங்களுடன் கூகுள் மேப்ஸ் களமிறங்க உள்ளது.

இந்த அப்டேட்கள் குறித்த அறிவுப்பு வெளியானது முதல் இந்திய பயனர்கள் இதற்கு மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்