கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் கூகுள் லென்ஸ்..!

Default Image

சமீபத்தில் கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஏஐ செயலி கூகுள் லென்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு புகைப்படத்தை வைத்தே அந்த புகைப்படத்தில் இருப்பது என்ன? எங்கு கிடைக்கும் என்பது போன்ற விபரங்களை கூகுள் நமக்கு தரும் இந்த பயனுள்ள செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றது.

Image result for கூகுள் லென்ஸ்இதனால் இந்த செயலியை பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பலன் பெற்று வருகின்றனர். இதற்கு முன்னர் இந்த கூகுள் லென்ஸ் செயலி பிக்சல் மற்றும் விலை உயர்ந்த அதிநவீன ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் இருந்தது. இந்த போட்டோ செயலி மிக விரைவில் ஐஒஎஸ் போன் பயனாளிகளுக்கும் கிடைக்கும் என தெரிகிறது.
Image result for கூகுள் லென்ஸ்கூகுள் பிளே ஸ்டோரில் இந்த பயனுள்ள போட்டோ செயலியில் உள்ள அனைத்து வசதிகள் குறித்து விரிவான விளக்கத்துடன் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைப்பதால், இந்த செயலியை டவுன்லோடு செய்த பின்னர் பயன்படுத்துவதில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித சிக்கலும் இருக்காது. அந்த விளக்கத்தில் டெக்ஸ்ட் செலக்சன், ஆப்ஜெக்ட் அறியும் முறை, பார்கோட் ஸ்கேன் செய்வது மேலும் லேண்ட்மார்க்கை கண்டுபிடிப்பது உள்ளிட்ட விபரங்கள் விளக்கமாக உள்ளது.

Image result for கூகுள் லென்ஸ்இந்த அதிநவீன அற்புதமான போட்டோ செயலி ஒன்பிளஸ் 5, ஒன்பிளஸ் 7டி, சாம்சங் கேலன்க்ஸி எஸ்8 போன்ற மாடல்களில் இருப்பதாகவும், அதோடு நோக்கியா 7 பிளஸ் மாடல்களிலும் இருப்பதாகவும், செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேற்கண்ட ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு ஓரியோவில் செயல்படும் போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for கூகுள் லென்ஸ்இந்த வகையில் நாம் புரிந்து கொள்ள முடிந்தது என்னவெனில் கூகுள் லென்ஸ் செயலி ஒருசில குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது என்பதுதான். இருப்பினும் இந்த போட்டோ செயலியான கூகுள் லென்ஸ் செயலி ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் அதற்கும் மேல் உள்ள தன்மையுள்ள ஸ்மார்ட்போன்களுக்கு சப்போர்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த செயலி மிக அதிகளவு டவுன்லோடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலியில் உள்ள சிறப்பு வசதிகளான ரியல் டைம் ஆப்ஜெக்ட்டை அறியும் தன்மை, கேமிரா மூலம் டெக்ஸ்ட் செலக்சன் மற்றும் ஆப்ஜெக்ட் அறியும் தன்மை மற்றும் ஆகியவை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் கூகுள் சியர்ச் மூலம் கண்டுபிடிக்கப்படும் பொருட்களின் தன்மை குறித்தும் முழு அளவில் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்