ஊருக்குள்ள இந்த புது கூகுள் ஆப்ஸை பற்றி தான் ஒரே பேச்சாம்..! நீங்க இன்னும் டவுன்லோட் பண்ணலியா..?

Default Image

தினமும் ஆயிர கணக்கான செயலிகளை உருவாக்கி கொண்டே தான் இருக்கிறார்கள். இருப்பினும் அவை எல்லாமே சிறந்த செயலிகளாக நாம் சொல்லி விட முடியாது. இவற்றில் ஒரு சில செயலிகள் மட்டுமே நமக்கு பலவிதத்திலும் உதவ கூடியவை. சில செயலிகள் எதற்கு இருக்கிறதென்று கூட நமக்கு தெரிவதில்லை.

இந்த வரிசையில் சில செயலிகள் வந்த சில மணி நேரங்களையே மிகவும் பிரபலமாகி விடுகின்றன. குறிப்பாக கூகுள் வெளியிடுகின்றன பல செயலிகளும் அப்படி தான். இவற்றில் தற்போதைய புது ரிலீசாக வரவுள்ள ஒரு செயலியும் சேர்ந்துள்ளது. அது என்ன செயலி என்பதையும், இதனால் ஏற்பட கூடிய பயன்களையும் பார்ப்போம்.

கூகுள்
கூகுள் வெளியிடுகின்ற பல்வேறு செயலிகள் மக்களின் பயன்களை குறி வைத்தே வருகின்றன. இவற்றில் ஒன்றுதான் “நெய்பர்லி” (neighbourly) என்கிற இந்த புதுவித செயலி. இதனால் பலவித பயன்கள் உள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயன்கள்
இந்த செயலியானது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ளோருடன் மட்டுமே இணைந்து பேச இயலும். அதாவது, நாம் ஒரு புது இடத்திற்கு சென்றால் அந்த இடத்தில் எது சிறப்பானதாக இருக்கும், நமக்கு வேண்டிய பொருள் அந்த இடத்தில் எங்கு கிடைக்கும் போன்ற கேள்விக்கான பதிலை இந்த செயலியை அந்த இடத்தில் பயன்படுத்துவோர் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்.

குழு
இந்த செயலியில் உங்களுக்கு தேவையான கேள்விகளை கேட்டு கொள்ளலாம். அதற்கான பதில்களை வேறொருவருக்கு தெரிந்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்வார். தற்போது இதன் முன்னோட்டம் மும்மையில் நடந்துள்ளது. இன்னும் சில காலங்களில் மற்ற இந்திய நகரங்களுக்கும் இந்த செயலி பயன்பாட்டில் வரும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்