ஜெமினி ஏஐ: கூகுள் நிறுவனம் தற்போது ஜெமினி ஏஐ பயன்பாட்டை இந்தியாவில் புதிய ஆப்பின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்களை வித்தியாசமான ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதில் கூகுள் நிறுவனம் தலை சிறந்த ஒன்றாகும். தற்போது, இந்த நிறுவனம் கூகுளின் ஜெமினி ஏஐ (Gemini AI) ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பானது ஹிந்தி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது போன்ற 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளது.
நான்கு மாதங்களுக்கு பிறகு, இந்தியாவில் ஜெமினி பயன்பாட்டை தனித்துவமான பயன்பாட்டாக கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், பயனர்கள் இந்த சேட்பாட்டை மேலும் எளிதாகப் பயன்படுத்த முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூகுள் சிஈஓ (CEO) ஆன சுந்தர் பிட்சை அவரது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அவர் கூறுகையில், “ஒரு சுவாரஸ்யமான செய்தி! இன்று நாங்கள் ஜெமினி மொபைல் ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறோம். இது ஆங்கிலம் மற்றும் 9 இந்திய மொழிகளில் கிடைக்கின்றது. மேலும், ஜெமினியின் அடுத்தநிலையாக செயலியில் இந்த உள்ளூர் மொழிகளை இதில் சேர்த்திருக்கிறோம். மேலும், புதிய அம்சங்களுடன், ஜெமினியை கூகுள் மெசேஜஸில் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்துகின்றோம்” என்று பதிவிட்டிருந்தார்.
கூகுள் கொண்டு வந்துள்ள இந்த புதிய பயன்பாடு இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பயனர்கள் கருதிகின்றனர். மேலும், இந்த பயன்பாடு எளிதில் நமக்கு புரியும் வண்ணம் நமது உள்ளூர் மொழிகளிலே பயன்படுத்த முடிவதனால் இது எளிய மக்களுக்கும் பல விதத்தில் உதவியாக அமையும் என ஜெமினி பயனர்கள் கூறியுள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…