முதல் ஃபைபர் ஆப்டிக் பாதை.! கூகுளின் மிகப்பெரிய டிஜிட்டல் வளர்ச்சி திட்டம்.!
கூகுள்: இந்திய பெருங்கடல் வழியாக ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா நாடுகளை இணைக்கும்படி உமோஜா எனும் உலகின் முதல் பைபர் ஆப்டிக் பாதையை கூகுள் செயல்படுத்த உள்ளது.
உலகளவில் டிஜிட்டல் இணைப்பை அதிகபடுத்தவும், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், ஆப்பிரிக்கா முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சியை ஆழப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் கூகுள் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதனை கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியாவுடன் நேரடியாக இணைக்கும் முதல் ஃபைபர் ஆப்டிக் இணைப்பு திட்டமான உமோஜாவை கூகுள் அறிவித்துள்ளது. இந்த இணைப்பு பசுபிக் கடல் வழியாக திட்டமிடப்பட்டுள்ளது. கென்யாவில் தொடங்கப்படும் உமோஜா (Umoja) ஆப்டிக் கேபிள் பாதையானது உகாண்டா, ருவாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஜாம்பியா, ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து இந்திய பெருங்கடல் வழியாக ஆஸ்திரேலியாவை சென்றடையும்.
உமோஜா ஆப்பிரிக்க நாடுகளை உலகின் பிற நாடுகளுடன் மிகவும் நம்பகத்தன்மையுடன் இணைக்க உதவும் திட்டமாகும். தற்போதுள்ள இணைப்பு வழிகளில் இருந்து இது வேறுபட்ட புதிய பாதையை கூறுகிறது. வரலாற்று ரீதியாக அதிக தாக்கத்தை சந்தித்த ஒரு பிராந்தியத்தை (ஆப்பிரிக்கா) மீட்பதற்கான வலையமைப்பை உருவாக்குவது மிக முக்கியம் என கூகுள் கூறுகிறது.
உமோஜா இணைப்பை வழங்க அனுமதித்த ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் கூட்டாண்மைக்கு கூகுள் தனது நன்றியையும் இந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
இன்றைய இணைய உள்கட்டமைப்பு அறிவிப்பில் கூடுதலாக, இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி ஆகியவை பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தவும், இந்த கூட்டு முயற்சிகளை துரிதப்படுத்தவும் கென்யாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்துடன் இணைந்து கூகுள் ஒப்பந்தம் செய்யவுள்ளது.
உலகை இணைப்பதிலும், கல்வி வளர்ச்சியை விரிவுபடுத்துவதிலும், ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் பாதுகாப்பான தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் புதிய திட்டங்கள் கொண்டுவருவது முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது.
2007இல் நைரோபியில் எங்கள் முதல் சப்-சஹாரா ஆப்பிரிக்கா அலுவலகத்தை Google திறந்தது முதல், பல டிஜிட்டல் முயற்சிகளில் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள நாடுகளின் அங்குள்ள அரசாங்கங்களுடன் கூகுள் கூட்டு முயற்சி மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை செய்லபடுத்தி உள்ளது. 2021ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் மாற்றத்தை அதிகரிக்க உதவும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உறுதியளித்து இருந்தது கூகுள்.
அதன்பிறகு, Google இப்பகுதியில் 900 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது, மேலும் 2026 ஆம் ஆண்டிற்குள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற முதலீட்டை எட்டிவிடுவோம் என்றும் கூறுகிறது. இந்த வாரம் ஆப்பிரிக்க நாடுகள் அளித்த ஒத்துழைப்பு என்பது ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் மாற்றம், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.